Homeகிரிக்கெட்என் லைப் செட்டில் ஆக நான் இவ்வளவு சம்பாதித்தால் போதும். தோனி என் மனைவி கிட்ட...

என் லைப் செட்டில் ஆக நான் இவ்வளவு சம்பாதித்தால் போதும். தோனி என் மனைவி கிட்ட இப்படி தான் சொன்னார் – வாசிம் ஜாபர் பேச்சு

-Advertisement-

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ் தோனி தனது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் வேளையில் இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் இருந்து அவரது ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதலே தோனி குறித்த பல்வேறு சுவாரஸ்யமான விடயங்கள் செய்திகளாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகளவு கவனத்தை ஈர்த்து வருகின்றன.அதோடு தோனி குறித்த பல்வேறு கேள்விப்படாத நிகழ்வுகளையும் பல முன்னாள் வீரர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான வாசிம் ஜாபர் தோனி குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அந்த வகையில் கடந்த 2005-ஆம் ஆண்டு தோனி இந்திய அணியில் புதிய வீரராக இணைந்த போது தனது லட்சியங்களை பற்றி பேசிய போது : 30 லட்சம் ரூபாய் சம்பாதிக்க விரும்பாதாகவும் அதன் பின்னர் அந்த பணத்தை வைத்துக்கொண்டு ராஞ்சியில் நிம்மதியாக வாழ வேண்டும் என்றும் தோனி தெரிவித்ததாக கூறியுள்ளார்.

-Advertisement-

இது குறித்து வாசிம் ஜாபர் கூறுகையில் : நான் 2005 ஆம் ஆண்டு இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுத்த போது எங்களது அணியில் தோனி புதிய வீரராக வருகை புரிந்திருந்தார். எப்பொழுதுமே நான் ஓய்வறையில் பின்பக்கம் அமர்வது வழக்கம். அந்த வகையில் நான் பின்புறமாக அமர்ந்திருந்த போது தோனி, தினேஷ் கார்த்திக், ஆர்.பி சிங் மற்றும் எனது மனைவி என அனைவரும் பின் வரிசையில் என்னுடன் அமர்ந்து பல்வேறு விடயங்களை பேசிக் கொண்டிருந்தனர்.

அதிலும் தோனி என் மனைவியிடம் அவரது வருங்காலத்தை பற்றி நிறையவே பேசிக் கொண்டிருந்தார். அப்போது விளையாட்டில் கவனம் செலுத்துவதற்காக அவர் ரயில்வே வேலைக்கும், பயிற்சிக்கும் இடையில் நிறைய பயணம் செய்துள்ளார் என்பது எங்களுக்கு தெரிய வந்தது. அதோடு அவர் என் மனைவியிடம் : “பாபி நான் 30 லட்ச ரூபாய் சம்பாதிக்க விரும்புகிறேன். அந்த பணத்துடன் ராஞ்சியில் நிம்மதியாக என்னால் வாழ முடியும் என தோனி என் மனைவியிடம் கூறினார்.

-Advertisement-

ஆனால் தற்போது அவர் இவ்வளவு பணம் சம்பாதித்த பிறகும் அவரது பணிவு தான் அவரை தனியாக காட்டுகிறது என வாசிம் ஜாபர் அவரது தன்மையான குணம் பற்றி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்