- Advertisement -
Homeவிளையாட்டுசிறப்பான கம்பேக்.. ஒத்த ஓவர், ரெட்ட விக்கெட்.. அதுவும் பெத்த விக்கெட்.. வாயா வாயா, உன்னதான்யா...

சிறப்பான கம்பேக்.. ஒத்த ஓவர், ரெட்ட விக்கெட்.. அதுவும் பெத்த விக்கெட்.. வாயா வாயா, உன்னதான்யா இவ்ளோ நாள் தேடனோம்.

- Advertisement-

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா தன்னுடைய அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினார்.இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் லீடராக பும்ரா பல்வேறு தொடர்களில் அணியின் வெற்றிக்காக பாடுபட்டார்.

சில போட்டிகளில் பும்ராவின் பங்களிப் பார்த்தான் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. அவ்வளவு எண் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த கேப்டனாக வலம் வந்ததற்கு பும்ரா போன்ற வீரர்கள் அணியில் இடம் பெற்றதுதான் காரணம்.

ஆனால் பும்ரா கடந்த 11 மாதங்களாக இந்திய அணியில் காயம் காரணமாக இடம் பெறவில்லை. இதனால் டி20 உலக கோப்பை போன்ற மிகப் பெரிய தொடர்களில் பும்ரா பங்கேற்க முடியாமல் போனது. இந்த நிலையில் நடப்பாண்டில் மிகப்பெரிய தொடரான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது.

இதில் பும்ரா இடம்பெற்றால் இந்திய அணியின் பலம் பல மடங்கு உயரும். இதனால் ரசிகர்கள் அவரின் வருகையில் எதிர்நோக்கி காத்திருந்தார்கள். இந்த நிலையில் அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பும்ராவின் பந்துவீச்சை தான் பார்க்க இருந்தனர்.

- Advertisement-

அவர்களுக்கு பும்ரா தன்னுடைய பந்துவீச்சு மூலம் முழு விருந்தையும் அளித்தார். ஆட்டத்தின் முதல் பந்தில் பும்ரா வீச அது பவுண்டரிக்கு சென்றது. எனினும் அடுத்த பந்தில் அயர்லாந்து வீரரின் ஸ்டம்பை பும்ரா பதம் பார்த்தார். இதனை எடுத்த அங்கிருந்த ரசிகர்கள் உற்சாகமாக குரல் கொடுத்தனர்.

இதன் பிறகு முதல் ஓவரின் ஐந்தாவது பதிலே பும்ராவின் பந்துவீச்சை தில் ஸ்கூப் ஆடி விக்கெட் கீப்பர் இடமே அயர்லாந்து வீரர் டெக்டார் பிடிபட்டார். இதன் மூலம் முதல் ஓவரிலேயே இரண்டு முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அயர்லாந்து பேட்டிங்கை பஞ்சராக்கினார் பும்ரா.

இந்த போட்டியில் பும்ரா நான்கு ஓவர்கள் வீசி இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் 24 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்தார். இதேபோன்று மற்றொரு வீரனான பிரசித் கிருஷ்ணா காயத்திலிருந்து திரும்பி நான்கு ஓவர்கள் வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சற்று முன்