Homeகிரிக்கெட்சூரியகுமார் யாதவ் தொடர்ந்து அணியில் இருப்பாரா மாட்டாரா? அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? - விளக்கம் அளித்த...

சூரியகுமார் யாதவ் தொடர்ந்து அணியில் இருப்பாரா மாட்டாரா? அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? – விளக்கம் அளித்த ராகுல் டிராவிட்

-Advertisement-

உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் சூழலில் இந்திய அணி வீரர்கள் மீதான அழுத்தமும், எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் எப்படி விளையாடுவார்கள் என்று ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதில் ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்துள்ளதால், சூர்யகுமார் யாதவின் பாடுதான் திண்டாட்டமாக உள்ளது. ஏனென்றால் இதுவரை சூர்யகுமார் யாதவ் விளையாடியுள்ள 26 ஒருநாள் போட்டிகளில் சேர்த்து 511 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். அண்மையில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 போட்டிகளில் மொத்தமாக 78 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார்.

-Advertisement-

அதேபோல் மார்ச் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் டக் அவுட்டாகி சாதனை படைத்தார். கடந்த 18 இன்னிங்ஸ்களில் சூர்யகுமார் யாதவ் 2 முறை மட்டுமே 30 ரன்களை கடந்து விளையாடி இருக்கிறார். அதேபோல் ஆசியக் கோப்பைத் தொடரில் கிடைத்த வாய்ப்பிலும் சோபிக்கவில்லை.

ஆனாலும் மும்பை வீரரான சூர்யகுமார் யாதவ் மீது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அசராத நம்பிக்கை வைத்திருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை மொஹாலியில் தொடங்கவுள்ளது. இதுகுறித்து ராகுல் டிராவிட் பேசும் போது, சூர்யகுமார் யாதவ் உலகக்கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

-Advertisement-

அதனால் சூர்யகுமார் யாதவ் மீது எங்களுக்கு முழு நம்பிக்கையும் உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் 2 ஆட்டத்திலும் சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாளைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருப்பார் என்று உறுதியாகியுள்ளது.

ஒருவேளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் சூர்யகுமார் யாதவ் மோசமாக விளையாடினால், உலகக்கோப்பை அணியிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

 

 

-Advertisement-

சற்று முன்