Homeகிரிக்கெட்எங்களோட ஃபீல்டிங் கொடூரத்தின் உச்சம்.. நானும் பெரிய தப்பு பண்ணிட்டேன்.. ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிதி சோகம்

எங்களோட ஃபீல்டிங் கொடூரத்தின் உச்சம்.. நானும் பெரிய தப்பு பண்ணிட்டேன்.. ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிதி சோகம்

-Advertisement-

உலகக்கோப்பை தொடரின் 16வது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. இதில் ஆஃப்கானிஸ்தான் அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி மோசமான தோல்வியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி வெறும் 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 4 போட்டிகளில் விளையாடி 4லும் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு கூடுதல் பிரகாசமாகியுள்ளது.

-Advertisement-

இந்த போட்டிக்கு பின் ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகிதி பேசும் போது, உலகக்கோப்பை போன்ற மிகப்பெரிய தொடர்களில் கிடைக்கும் கேட்ச்களை பிடிக்க வேண்டும். இன்றைய ஆட்டத்தில் ஏராளமான கேட்ச்களை தவறவிட்டுள்ளோம். எங்களின் ஃபீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. அதன் காரணமாக தோல்வியடைந்தோம். நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் கடைசி 6 ஓவர்களில் ஏராளமான ரன்களை விளாசி தள்ளினர். அவர்கள் 40வது ஓவரின் போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டேன்.

அதேபோல் நியூசிலாந்து அணியின் செட் பேட்டர்களை வீழ்த்த எங்கள் பவுலர்களால் முடியவில்லை. நாங்கள் அவர்களை வீழ்த்த வாய்ப்பு கிடைத்தும், தவறவிட்டுவிட்டோம். அதேபோல் நாங்கள் டாஸ் வென்று சேஸிங் எடுத்ததும் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஒன்றை சொல்ல விரும்புகிறேன். எந்த வீரராலும் எந்த பிட்சையும் 100 சதவீதம் சரியாக கணிக்க முடியாது.

-Advertisement-

ஆனால் டாஸை விடவும் எங்களுக்கு ஃபீல்டிங் தான் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் இந்த தோல்வி எங்களை பாதிக்கும். அடுத்த போட்டிக்கு முன்பாக வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி, நிச்சயம் அனைவரும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முயற்சிப்போம். நிச்சயமாக எங்களின் கம்பேக் சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஆஃப்கானிஸ்தான் அணி இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலமாக அடுத்தடுத்து போட்டிகளில் நிச்சயம் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

-Advertisement-

சற்று முன்