- Advertisement -
Homeவிளையாட்டுதோல்வி வலிக்கிறது.. அரையிறுதி வாய்ப்பை பற்றி கவலையில்லை.. இனி எங்க ஆட்டம் தரமாக இருக்கும்.. பாபர்...

தோல்வி வலிக்கிறது.. அரையிறுதி வாய்ப்பை பற்றி கவலையில்லை.. இனி எங்க ஆட்டம் தரமாக இருக்கும்.. பாபர் அசாம் கொடுத்த வாக்குமூலம்

- Advertisement-

உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 141 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பின் இணைந்த ஷதாப் கான் – சகீல் இருவரும் பாகிஸ்தான் அணியை மீட்டனர். இறுதியாக பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ஷகீல் 52 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களும் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஷம்சி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்து த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா 5 வெற்றிகளுடம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதியில் ஒரு கால் பதித்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல் உலகக்கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி முதல்முறையாக தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான சாதனையை படைத்துள்ளது. இந்த தோல்வி பற்றி அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் பேசும் போது, வெற்றிக்கு அருகில் சென்று தொல்வியடைந்துள்ளோம். சரியான ஃபினிஷ் செய்யவில்லை. அனைத்து வீரர்களும் ஏமாற்றத்தில் உள்ளனர். நிச்சயம் நாங்கள் கம்பேக் கொடுப்போம்.

- Advertisement-

பேட்டிங்கில் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துள்ளோம். ஆனால் பவுலர்கள் அனைவருமே சிறப்பாக போராடினார்கள். ஆனால் வெற்றியை மட்டும் எங்களால் பெற முடியவில்லை. விளையாட்டின் ஒரு பகுதி என்று தான் தோல்வியை எடுத்துக் கொள்கிறோம். டிஆர்எஸ் பொறுத்தவரை, நடுவர் அவுட் கொடுத்திருந்தால் நாங்கள் வென்றிருப்போம். இந்த ஆட்டத்தை வெல்வதற்கு வாய்ப்புகள் கிடைத்தது.

ஆனால் கடைசி நேரத்தில் சொதப்பிவிட்டோம். அடுத்து விளையாடப் போகும் 3 போட்டிகளில் நிச்சயம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம். நிச்சயம் பாகிஸ்தான் அணியை வெற்றிபெற வைப்போம். அதன்பின் அரையிறுதி வாய்ப்பு பற்றி யோசிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சற்று முன்