- Advertisement -
Homeவிளையாட்டுஎங்ககிட்டயே பலே ஸ்பின்னர்லாம் இருக்காங்க... இந்தியாவோட ஸ்பின் அட்டாக்லாம் எங்ககிட்ட செல்லுபடி ஆகாது - ஆப்கான்...

எங்ககிட்டயே பலே ஸ்பின்னர்லாம் இருக்காங்க… இந்தியாவோட ஸ்பின் அட்டாக்லாம் எங்ககிட்ட செல்லுபடி ஆகாது – ஆப்கான் கேப்டன் பேட்டி

- Advertisement-

உலகக்கோப்பை கோப்பை தொடருக்கு இலங்கை, நெதர்லாந்து போல் அல்லாமல் நேரடியாக தகுதிபெற்ற அணிகளில் ஆஃப்கானிஸ்தான் அணியும் ஒன்றாகும். கத்துக்குட்டி அணியாக பார்க்கப்பட்டாலும், பெரிய அணிகளையும் அசால்ட்டாக சம்பவம் செய்யும் திறமை கொண்ட வீரர்கள் ஆஃப்கானிஸ்தான் அணியினர். இதனால் அந்த அணியை யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது.

ஆனால் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று அனைத்து துறைகளிலும் மோசமாக செயல்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் நாளை நடக்கவுள்ள போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி, வலிமையான இந்திய அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

இந்த போட்டியை பற்றி ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகிதி பேசும் போது, ஆஃப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் மிகச்சிறந்த ஸ்பின்னர்களை வல்கைபயிற்சியில் எதிர்கொண்டு வருகிறார். ரஷீத் கான், நூர் அஹ்மத், முகமது நபி, முஜீப் என்று அனைவருமே தரமான ஸ்பின்னர்கள். அதனால் எங்கள் அணியால் ஸ்பின் பவுலிங்கை(இந்தியாவின்) சிறப்பாக எதிர்கொள்ள முடியும்.

கடந்த போட்டியில் நாங்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஆனால் ஒரே ஆட்டத்தை வைத்து எந்த அணியையும், வீரரையும் முடிவு செய்ய கூடாது. ஸ்பின்னர்கள் மட்டுமல்லாமல் அடுத்த போட்டியில் அனைத்து துறைகளிலும் சிறந்த கம்பேக்கை நாங்கள் கொடுப்போம் என்று உறுதியாக கூறுவேன். பேட்டிங்கில் ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும் என்று உலகக்கோப்பை தொடருக்கு முன் கூறியிருந்தேன்.

- Advertisement-

அதனை கடந்த போட்டியில் எங்களால் செய்ய முடியவில்லை. ஆனால் எங்கள் அணியினர் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நாளைய ஆட்டத்தில் மட்டுமல்லாமல், தொடர் முழுவதும் சிறந்த ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துவோம். ரஷீத் கானை பொறுத்தவரை அவர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பவுலர். எதிரணிகள் எப்படி விளையாடுகிறார்கள் என்பது பற்றி எங்களுக்கு கவலையில்லை. எங்களுக்கு நாங்கள் செய்த திட்டங்களை செயல்படுத்துவது தான் முக்கியம்.

கடந்த 6 மாதங்களாக அதிகபடியான ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். அதனால் தரமான அணிகளுக்கு எதிரான எந்த லைன் மற்றும் லெந்தில் வீச வேண்டும் என்று ரஷீத் கானுக்கு நன்றாக தெரியும். அதனால் நாளைய ஆட்டத்தில் ரஷீத் கான் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்பலாம்.

நவீன் உல் ஹக் – விராட் கோலி விவகாரத்தை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. இந்தியா கடந்த சில ஆண்டுகளாக எங்களுக்கு சொந்த மண் போல் இருந்துள்ளது. மைதானத்தில் ஆக்ரோஷம் இரு அணிகளுக்கும் வரும். அதனால் அதனை பெரிதுபடுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்