- Advertisement -
Homeவிளையாட்டுஇந்திய அணிக்கு எதிரான தொடருக்காக முக்கிய வீரர்களை விடுவிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி. இக்கட்டான சூழலால்...

இந்திய அணிக்கு எதிரான தொடருக்காக முக்கிய வீரர்களை விடுவிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி. இக்கட்டான சூழலால் ஏற்பட உள்ள மாற்றம்

- Advertisement-

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கின்றன. அதில் ஏற்கனவே 8 அணிகள் நேரடியாக இந்த உலககோப்பை தொடரில் விளையாட தகுதிபெற்ற வேளையில் கடைசி இரண்டு இடங்களுக்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.

அந்த தகுதி சுற்றில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும். அந்த வகையில் எதிர்வரும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகளில் இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் போன்ற முன்னணி அணிகளும் இடம்பெற்றுள்ளன, அந்த தகுதி சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே 50 ஓவர் உலககோப்பை தொடரில் விளையாட முடியும் என்ற நிலைக்கு இந்த மிகப்பெரும் இரண்டு அணிகள் தள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த தகுதி சுற்று போட்டிகளானது ஜூலை 9-ஆம் தேதி வரை ஜிம்பாப்வே-யில் நடைபெற உள்ளன. இந்நிலையில் அதற்கு அடுத்த இரண்டு நாட்களிலேயே இந்திய அணிக்கு எதிரான தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்ப இருப்பதினால் அந்த அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? என்ற கேள்வி பலரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் அந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு எதிராக தங்களது அணியின் முக்கிய வீரர்கள் கையில் மேயர்ஸ், ரோஸ்டன் சேஸ், அல்சாரி ஜோசப், ஜேசன் ஹோல்டர் போன்ற முக்கியமான வீரர்கள் இடம்பெறவேண்டும் என்பதனால் அவர்கள் உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் இருந்து வெளியேறி இந்திய அணிக்கு எதிரான தொடருக்காக தயாராகுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

- Advertisement-

ஏனெனில் உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் விளையாடிவிட்டு 2 நாட்கள் இடைவெளியில் நேரடியாக அவர்களால் இங்கு பங்கேற்க முடியாது என்பதனால் அவர்கள் தகுதிச்சுற்று போட்டிகளில் இருந்து வெளியேறி இந்திய அணிக்கு எதிரான தொடருக்காக தயார்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

அதே வேளையில் இந்த தகுதிச்சுற்று போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி செல்லும் பட்சத்தில் இந்த மாற்றங்கள் நிகழும் என்று கூறப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது 10 நாட்களுக்கு முன்னதாகவே அங்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்ளும் என்று இந்திய அணியின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்