- Advertisement -
Homeவிளையாட்டுநாங்க வந்துட்டே இருக்கோம்.. 25 வருசம் கழிச்சு வெஸ்ட் இண்டீஸ் படைத்த வரலாறு.. மீண்டும் நொந்து...

நாங்க வந்துட்டே இருக்கோம்.. 25 வருசம் கழிச்சு வெஸ்ட் இண்டீஸ் படைத்த வரலாறு.. மீண்டும் நொந்து நூடுல்ஸ் ஆன இங்கிலாந்து..

- Advertisement-

உலக கோப்பைத் தொடர் முடிந்த பிறகு தற்போது அனைத்து அணிகளும் மற்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு நாட்டு கிரிக்கெட் தொடர்களை ஆடி வருகிறது. அந்த வகையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி 20 கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் டி 20 தொடர் இன்று முதல் ஆரம்பமாகிறது.

இதே போல, உலக கோப்பைத் தொடரில் அரையிறுதி சுற்றுக்கு கூட முன்னேறாமல் கடும் அதிர்ச்சி அளித்திருந்த இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள், முதலாவதாக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி இருந்தது.

இதன் முதல் போட்டியில், இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 325 ரன்கள் குவிக்க அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்றே பலரும் கருதினர். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்தது முதலே அதிரடி பட்டாசாய் வெடித்தனர். வெ. இண்டீஸ் கேப்டனின் ஷாய் ஹோப் சதமடித்து அசத்த, 7 பந்துகள் மீதம் வைத்து வெற்றி இலக்கை எட்டி பட்டையைக் கிளப்பியது. சதமடித்து ஆட்ட நாயகன் விருது வென்ற ஷாய் ஹோப், தோனி தனக்கு கொடுத்த அறிவுரை தனது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான பாதையை மாற்றியதாக குறிப்பிட்டிருந்தது கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

தொடர்ந்து, இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து எளிதாக வெற்றி பெற்றிருந்தது. இதனால், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இங்கிலாந்து மற்றும் வெ. இண்டீஸ் இடையே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 40 ஓவர்களில் (மழை காரணமாக) 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement-

வெ. இண்டீஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் திணறியது இங்கிலாந்து அணி. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய வெ. இண்டீஸ் அணி, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட, தொடரையும் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது. அதாவது 25 ஆண்டுகள் கழித்து தங்களது மண்ணில் இங்கிலாந்து அணியை ஒரு நாள் தொடரில் வீழ்த்தி உள்ளது தான்.

சமீப காலமாக, டி 20 உலக கோப்பை, ஒரு நாள் உலக கோப்பை என இரண்டிலும் தகுதி பெறாமல் சிறிய அணிகளுடன் தோற்று தகுதி சுற்றிலேயே வெளியேறி இருந்த வெ. இண்டீஸ் அணி, தற்போது இங்கிலாந்து அணியை வீழ்த்தி உள்ளது நிச்சயம் அடுத்த ஆண்டில் நடக்கும் டி 20 உலக கோப்பைத் தொடருக்கு அவர்களுக்கு தெம்பாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

மறுபக்கம் இங்கிலாந்து அணி தொடர்ந்து அதிர்ச்சி தோல்விகளை சந்தித்து வருவது அந்த அணி ரசிகர்களை கடும் சோகத்திலும் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்