- Advertisement 3-
Homeவிளையாட்டுஇதுதான் கடைசி வாய்ப்பு.. பயன்படுத்திக் கொள்வாரா சஞ்சு சாம்சன்.. திலக் வர்மாவால் தலைமேல் தொங்கும் கத்தி

இதுதான் கடைசி வாய்ப்பு.. பயன்படுத்திக் கொள்வாரா சஞ்சு சாம்சன்.. திலக் வர்மாவால் தலைமேல் தொங்கும் கத்தி

- Advertisement 1-

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது டி20 போட்டி இன்று அமெரிக்காவில் நடக்கவுள்ளது. ஏற்கனவே விளையாடிய 3 டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் இந்திய அணிக்கு வாழ்வா சாவா போட்டியாக இன்றைய ஆட்டமும் அமைந்துள்ளது.

இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணி அமெரிக்காவில் அதிகளவில் போட்டிகளில் விளையாடி வருவதால், அந்த ஆடுகளம் மற்றும் பிட்சின் ஆகியவற்றின் தன்மையை அறிந்து வைத்திருப்பார்கள். கடந்த முறை இந்திய அணி அமெரிக்காவில் விளையாடிய போது ரன்மழை பொழிந்தது என்றே சொல்லலாம்.

இதனால் நிச்சயம் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் தான் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் தோல்வியடைந்தால் 17 ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தொடரவை இழந்த மோசமான சாதனையை இந்திய அணி படைக்கும். இதனால் வெற்றிக்காக இந்திய வீரர் பாடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அதேபோல் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு விரைவில் நடக்கவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக ஆடிய வீரர்களே ஆசியக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இதனால் சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் தங்களது பேட்டிங் ஃபார்மை நிரூபிக்க வேண்டிய நிலை உள்ளது.

- Advertisement 2-

சூர்யகுமார் யாதவ் கடந்த போட்டியிலேயே சிறப்பாக விளையாடி இருந்தாலும், தன்னால் சீரான பேட்டிங்கை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபிக்க வேண்டிய தேவை உள்ளது. அதேபோல் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டாலும் முதல் போட்டியில் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி சோபிக்க தவறினார்.

ஆசியக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் தேர்வு செய்யப்பட வேண்டுமென்றால், இன்று மற்றும் நாளை நடக்கவுள்ள இரு டி20 போட்டிகளில் தரமான பேட்டிங்கை இருவருமே வெளிப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அந்த வாய்ப்பு இளம் வீரரான திலக் வர்மாவுக்கு செல்வதற்கான சூழல் சரியாக அமைந்துள்ளது.

சற்று முன்