- Advertisement -
Homeவிளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்.. இந்தியா தோத்தா என்ன நடக்கும்.. ரோஹித்திற்கு கிடைக்க போகும் மோசமான...

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்.. இந்தியா தோத்தா என்ன நடக்கும்.. ரோஹித்திற்கு கிடைக்க போகும் மோசமான பெயர்..

- Advertisement-

ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிகளும் யாரை சொந்தமாக்கிக் கொள்ளப் போகிறார்கள் என்பது தொடர்பான செய்தி இன்னும் ஒரு நாளில் வெளியாகி விடும். இது தொடர்பான பரபரப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு புறம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியையும் ரசிகர்கள் மிக கவனமாக உற்று நோக்கி வருகிறார்கள்.

இரண்டு டெஸ்டை இழந்து இந்திய அணி தொடரை கோட்டை விட்டாலும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது பல விஷயங்களில் இந்திய அணிக்கு பெருமையை சேர்க்கலாம். இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் டெஸ்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் இந்தியாவை இந்தியாவால் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

அது மட்டும் இல்லாமல் இந்த டெஸ்ட் தொடர் முடிந்ததற்கு பின்னர் இந்திய அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. இந்திய மண்ணில் இன்னும் ஒரே ஒரு போட்டி மீதம் இருப்பதால் அதில் நிச்சயம் சிறப்பாக ஆடினால் தான் வெளிநாட்டு மண்ணில் சென்று அதே நம்பிக்கையுடன் செயல்பட முடியும்.

அதுமட்டுமில்லாமல் இந்திய மண்ணிலேயே ரோஹித், கோலி உள்ளிட்ட பலரின் பேட்டிங் மிக மோசமாகத்தான் அமைந்து வருகிறது. இதே நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு சென்றால் நிச்சயம் இந்திய அணி மீண்டும் தொழில்களை தான் சந்திக்கும். இதன் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணியில் இருக்கும் தவறுகள் அனைத்தும் சரியானால் தான் அடுத்த தொடருக்கு முன்பாக நம்பிக்கையான ஒரு விஷயமாகவும் அமையலாம்.

- Advertisement-

இதனால் ரோஹித் ஷர்மா நிச்சயம் தனது பேட்டிங் மற்றும் கேப்டன்சி என இரண்டிலிருக்கும் தவறை சரி செய்து அணியில் தேவைப்படும் மாற்றங்களை உண்டாக்கி நியூசிலாந்தை மிக மோசமாக வீழ்த்துவார்கள் என்பதும் ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஏற்கனவே ரோஹித் ஷர்மா மீது விமர்சனம் அதிகமாக இருப்பதால் சில டெஸ்ட்டில் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்றும் பலரும் குறிப்பிட்டு வந்தனர்.

இந்த நிலையில் தான் கடைசி டெஸ்ட் போட்டியை இந்திய அணி இழக்கும் பட்சத்தில் எந்த இந்திய கேப்டனுக்கும் கிடைக்காத ஒரு மோசமான பெருமை ரோஹித் ஷர்மாவுக்கு கிடைக்கலாம். இதுவரை எந்த இந்திய கேப்டனும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் வொயிட் வாஷ் செய்து இழந்தது கிடையாது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி தோல்வி அடைந்தால் முதல் கேப்டனாக சொந்த மண்ணில் மூன்று அல்லது அதற்கு மேல் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அனைத்தையும் இழந்த கேப்டனாக ரோஹித் மாறி விடுவார்.

இதனால் மற்ற அனைத்து காரணங்களையும் தாண்டி இந்த ஒரு விஷயத்திற்காகவாவது இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

சற்று முன்