- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்தியா Vs தென்னாப்பிரிக்கா.. கடைசியா டி20 வேர்ல்டு கப் நாக் அவுட்ல ஆடுனப்போ என்னாச்சு தெரியுமா..

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா.. கடைசியா டி20 வேர்ல்டு கப் நாக் அவுட்ல ஆடுனப்போ என்னாச்சு தெரியுமா..

- Advertisement 1-

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய இரு அணிகளும் டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது முதலே சிலர் இது தொடர்பாக நிறைய மீம்ஸ்களையும் வைரலாக்கி வருகின்றனர். இதற்கு காரணம், இந்த இரண்டு அணிகளும் ஐசிசி தொடரின் நாக் அவுட் போட்டிகளில் சொதப்பி வருவதால் தான். இந்திய அணி கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த டி 20 உலக கோப்பையையும், 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பையையும், 2013 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியையும் தோனி தலைமையில் வென்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பத்து ஆண்டுகளாக தோனி, கோலி, ரோஹித் உள்ளிட்ட பலரின் தலைமையில் ஆடி வரும் இந்திய அணி, ஒரு முறை கூட உலக கோப்பையை கைப்பற்றவில்லை. இதற்கான பொன்னான வாய்ப்பு பல முறை வந்த போதிலும் நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணி சொதப்பி அதனை இழக்கவும் செய்திருந்தது.

இதற்கு சிறந்த உதாரணமாக, கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் உலக கோப்பை இறுதி போட்டியை சொல்லலாம். அதற்கு முன்பாக கூட, 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி பரிதாபமாக தோல்வி அடைந்து வெளியேறி இருந்தது.

இப்படி ஐசிசி தொடர் என வந்து விட்டாலே நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணி பல முறை தொடர்ந்து சொதப்பவும் செய்துள்ளது. இவர்களுக்கு ஒரு படி மேலே இருக்கும் தென்னாபிரிக்க அணி, பலமுறை ஐசிசி தொடர்களின் அரையிறுதி போட்டியில் நுழைந்த போதிலும் இறுதி போட்டிக்கும் முன்னேறும் வாய்ப்பு இந்த டி20 உலக கோப்பைத் தொடரில் தான் முதல் முறையாக கிடைத்துள்ளது.

- Advertisement 2-

இதனால், இந்த இரண்டு அணிகளையும் ஐசிசி தொடரின் நாக் அவுட் போட்டிகளின் சோக்கர்ஸ் என்றும் ரசிகர்கள் ஜாலியாக கலாய்த்தும் வருகின்றனர். அப்படி இருக்கையில் இந்த இரண்டு அணிகளில் ஒன்று அதனை இந்த முறை நிச்சயம் மாற்றி பதிவு செய்து கோப்பையை கைப்பற்றி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் டி20 உலக கோப்பைத் தொடரின் நாக் அவுட் போட்டியில் கடைசியாக மோதிய போது அதன் முடிவு என்னவாக இருந்தது என்பது பற்றி தற்போது பார்க்கலாம். 2014 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் கடைசியாக டி 20 உலக கோப்பையின் அரையிறுதி போட்டியில் மோதி இருந்தது.

இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி, கடைசி ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. இதில் கோலி 44 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார். இந்த போட்டியில் தான் 19 வது ஓவரில் கடைசி பந்தை தோனி ரன் அடிக்காமல் அடுத்த ஓவரில் கோலி வெற்றி இலக்கை அடிக்க வேண்டும் என முடிவு செய்து ஆடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்