- Advertisement 3-
Homeவிளையாட்டுகடைசியா டி 20 மேட்ச்ல ரோஹித், கோலி ஓப்பனிங் இறங்குனப்போ என்னாச்சு தெரியுமா.. எதிர்பார்ப்பை எகிற...

கடைசியா டி 20 மேட்ச்ல ரோஹித், கோலி ஓப்பனிங் இறங்குனப்போ என்னாச்சு தெரியுமா.. எதிர்பார்ப்பை எகிற வைத்த சம்பவம்..

- Advertisement 1-

டி20 உலக கோப்பை தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இதுவரை 2 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் முதலாவதாக நடந்த போட்டியில் கனடாவை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து நடந்த இரண்டாவது போட்டியில் பாப்பா நியூ கியூனியா அணியை எதிர்த்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் தட்டு தடுமாறி வெற்றியை பெற்றிருந்தது.

தோல்வியின் பிடியில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, ரோஸ்டன் சேஸ் உதவியுடன் வெற்றியை சொந்தமாக்கி இருந்தது. டி20 உலக கோப்பை தொடரில் சிறிய அணிகளும் பட்டையை கிளப்பி வருவதால் நிச்சயம் அனைத்து போட்டிகளும் சிறப்பாக இருக்கும் என்று தான் தெரிகிறது. அப்படி இருக்கையில், தற்போது ஓமன் மற்றும் நமீபியா ஆகிய அணிகளும் மோதி வருகின்றன.

இதற்கிடையே ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தங்களின் முதல் போட்டியை அயர்லாந்து அணிக்கு எதிராக ஜூன் 5-ம் தேதியன்று ஆடவுள்ளது. சமீபத்தில் நடந்த பயிற்சி போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி, மிகச் சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வெற்றியும் பெற்றிருந்தனர்.

விராட் கோலி இந்த போட்டியில் ஓய்வில் இருக்க ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களம் இறங்குவார் என கருதப்பட்டது. ஆனால் ரோகித் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி இருந்தனர். லீக் போட்டிகள் வரும்போது நிச்சயமாக விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா அல்லது ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக இறங்குவார்கள் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement 2-

இது குறித்த ரோஹித்தின் திட்டம் என்னவாக இருக்கும் என்பதே பெரிய கேள்வியாக இருக்கும் நிலையில் பலரும் ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்து வருகின்றனர். இதற்கு காரணம் இவர்கள் இருவரும் இணைந்து களமிறங்கிய கடைசி டி 20 போட்டியின் ஸ்கோர் தான்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 போட்டியில் கடைசியாக தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் கோலி இணைந்து களமிறங்கி இருந்தனர். இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 34 பந்துகளில் 64 ரன்களும், விராட் கோலி 52 பந்துகளில் 80 ரன்களும் எடுக்க இந்திய அணி 20 ஓவர்களில் 224 ரன்கள் சேர்த்திருந்தது.

இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இந்திய அணி இழக்க அதன் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் அதிரடி காட்டி இருந்தனர். இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தனர். இதனால் டி20 உலக கோப்பை தொடரிலும் ஜெய்ஸ்வாலுக்கு ஒரு சில வாய்ப்புகளை கொடுத்துவிட்டு கோலி மற்றும் ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக தொடர்ந்து களமிறங்கினால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

சற்று முன்