ஐ.பி.எல் கோப்பையில் பொறிக்கப்பட்டுள்ள அந்த ஒரு சம்ஸ்கிருத வாசகம். அதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா? பலே பலே சரியான வாசகம் தான் போல.

- Advertisement -

இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டியத்தில் நடைபெற இருக்கிறது. தோனி ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்வாரா அல்லது ஹர்திக் பாண்டியா 2வது முறையாக கோப்பையை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது உள்ளது.

இந்திய நேரப்படி இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டியில் வெல்லும் அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதே போல 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடி ரூபாயும், மூன்றாவது இடத்தில உள்ள மும்பை அணிக்கு7 கோடியும் வழங்கப்படலாம் என்றும் கூறப்டுகிறது.

- Advertisement -

இப்படியான இந்த ஐபிஎல் கோப்பையை வெல்வது என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் அல்ல. அதேபோல் அந்த கோப்பையில் ஏராளமான தகவல்களும் ஒளிந்துள்ளன. ஆரம்ப எடிஷனில் இந்த கோப்பையில் இந்திய வரைபடமும் அதோடு ஒரு பேட்ஸ்மேன் பந்தை அடிப்பது போன்ற ஒரு படமும் இடம் பெற்றிருந்தது.

ஆனால் அடுத்தடுத்த கட்டத்தில் ஐ.பி.எல் கோப்பையின் வடிவமைப்பில் சில மாறுதல்கள் கொண்டுவரப்பட்டன. 1983 ஆம் ஆண்டு உலககோப்பையில் ஒரு ஆங்கில வாசகம் இருக்கும். அது போன்று ஒரு வாசகம் ஐ.பி.எல் கோப்பையிலும் பொறிக்கப்பட்டது. சமஸ்க்ருத மொழியில் உள்ள அந்த வாசகம் இந்திய வரைபடத்திற்கு அருகில் மிக தெளிவாக இந்த கோப்பையில் பொறிக்கப்பட்டது.

- Advertisement -

“யாத்ர பிரதிப அவ்சர ப்ரப்னோதிஹி” என்பது தான் அந்த வாசகம் . “திறமை வாய்ப்புகளை சந்திக்கும் களம்” என்பதே இதன் அர்த்தம். உண்மையில் இந்த வாசகம் ஐபிஎல் கோப்பைக்கு மிகச் சரியான ஒரு வாசகம் என்றே சொல்லலாம். ஏனென்றால் எவ்வளவோ திறமைகள் இருந்தும் பலர் வெளியில் தெரிமையால் இருந்தனர். அந்த நிலையை மாற்றியது ஐபிஎல் தான்.

இதையும் படிக்கலாமே: கேஎல் ராகுல் குறித்து வெளியான சர்ச்சை புகைப்படம். கோவத்தோடு அவருடைய மனைவி போட்ட அதிரடி பதிவு. கப் சிப் ஆன நெட்டிசன்கள்

ஐபிஎல் வந்த பிறகு எத்தனையோ இளம் வீரர்களின் திறமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதோடு அவர்களில் பலர் இந்திய அணிக்காகவும் தேர்வாகி உள்ளனர். பும்ரா,ஹர்திக் பாண்டிய இப்படி எத்தனையோ வீரர்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அதனால் இந்த வாசகம் என்பது மிக மிக பொருத்தமான ஒரு வாசகமாகவே பார்ப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்