சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் தனியை வென்று ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டி, பார்க்கும் அனைவரையும் இருக்கையின் நுனிக்கே கொண்டு சென்றது என்றால் அது மிகையாகாது.
டிஎல்எஸ் காரணமாக 15 ஓவர்களில் 171 ரன்கள் அடித்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கோடு சென்னை அணி களத்தில் இறங்கியது. தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடியதால் வெற்றி சென்னை அணியின் வசம் இருந்தது. ஆனால் போகப் போக வெற்றியானது எந்த அணிக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற ஒரு நிலை மாறியது. ஆனால் கடைசியில் வெற்றி சென்னை அணியின் வசம் ஆனது.
கடைசி ஓவரில் 13 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற ஒரு நிலை சென்னை அணிக்கு இருந்தது. அந்த கடைசி ஓவரை மோஹித் சர்மா வீசினார். அதில் அவர் அருமையான மூன்று யார்கர்களை வீசி போட்டியை கட்டுக்குள் கொண்டு வந்தார். ஆனால் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்களை அடிக்க வேண்டும் என்ற ஒரு நிலை இருந்தது. அந்த நிலையில் ஜடேஜா ஒரு பந்தை சிக்ஸருக்கும் மற்றொரு பந்தை பவுண்டரிக்கும் அனுப்பி சென்னை அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
குஜராத் அணியின் இந்த தோல்விக்கு பிறகு மோஹித் சர்மா ரொம்பவும் சோகமாகவே காணப்பட்டார். இந்த போட்டியின் இறுதி ஓவருக்கு முன்பு தான் யோசித்தது என்ன? இறுதி ஓவருக்கு பின்பு தன்னுடைய மனநிலை எப்படி இருந்தது போன்ற தகவல்களை அவர் இந்தியன் எக்ஸ்பிரசுக்கு ஒரு பேட்டி மூலம் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பது பின்வருமாறு.
என்னால் தூங்கவே முடியவில்லை. போட்டியில் ஒருவேளை வென்றிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். இந்தப் பந்தை இப்படி வீசியிருக்கலாமோ அந்த பந்தை அப்படி வீசி இருக்கலாம் என்று எண்ணினேன். இது ஒரு சிறந்த பீலிங்காக இல்லை எங்கோ ஏதோ தொலைத்தது போல் இருக்கிறது. ஆனால் இதிலிருந்து கடந்து போக நான் முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதேசமயம் கடைசி ஓவரை வீசுவதற்கு முன்பு தன்னுடைய பிளான் என்ன என்பதையும் அவர் கூறியுள்ளார். அவர் கூறுகையில், நான் இதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? எப்படி பந்து வீசுவது என்பதை அதிகப்படியாக நெட் ப்ராக்டிசில் பயிற்சி எடுத்தேன். அதேசமயம் என்னுடைய உள்ளுணர்வு என்ன சொன்னதோ அதையே நான் கடைசி ஓவரில் செய்தேன்.
இதையும் படிக்கலாமே: அம்பாத்தி ராயுடுவின் இடத்தை அடுத்த சீசனில் நிரப்பப் போவது யார்? இந்த 3 வீரர்களில் யாருக்கு வாய்ப்பு இருக்கும்
நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தேன். இது போன்ற ஒரு சூழ்நிலைகளை இதற்கு முன்பும் நான் சந்தித்துள்ளேன். அதனால் எல்லா பந்துகளையும் யார்கராக வீசலாம் என்று என் உள்ளுணர்வு கூறியது அதையே நான் செய்தேன் என்று கூறியுள்ளார்.