Homeகிரிக்கெட்தோத்துட்டு சாக்கு சொல்றிங்களா? உங்க கிட்ட என்ன பிளான் இருந்தது?... தப்பிக்க வாய்ப்பே இல்லை -...

தோத்துட்டு சாக்கு சொல்றிங்களா? உங்க கிட்ட என்ன பிளான் இருந்தது?… தப்பிக்க வாய்ப்பே இல்லை – வாசிம் அக்ரம் காட்டம்

-Advertisement-

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தரமான வெற்றியை பெற்றது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. 154 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் ஆடிய நிலையில், அடுத்த 36 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணி தரப்பில் பும்ரா, ஜடேஜா, ஹர்திக், சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதிலும் குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் சேர்த்து அபார வெற்றியை பெற்றது.

-Advertisement-

இதன் மூலம் இந்திய அணியிடம் உலகக்கோப்பை தொடரில் 8வது முறையாக பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது. அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது.

இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் பேசும் போது, இந்த போட்டியை ஐசிசி நடத்தியதா அல்லது பிசிசிஐ நடத்தியதா என்றே தெரியவில்லை. ஏதோ பைலேட்டரல் தொடர் போல் தான் இருந்தது. மைதானத்தில் இருந்த டிஜே, ஒருமுறை கூட பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பேசியதாகவே நினைவில் இல்லை.

-Advertisement-

தோல்விக்கு இதனை ஒரு காரணமாக கூறவில்லை. ஆனால் இதுபோன்ற சம்பவங்களும் வீரர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன். இந்திய அணியை நாக் அவுட் போட்டியில் சந்திக்க தயாராகுவோம் என்று கூறினார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

வாசிம் அக்ரம் கூறும் போது, பிரதர், என்ன திட்டத்துடன் நீங்கள் இந்திய அணிக்கு எதிராக களமிறங்கினீர்கள் என்று கொஞ்சம் சொல்லுங்கள். குறிப்பாக இடதுகை ஸ்பின்னரான குல்தீப் யாதவிற்கு எதிராக என்ன திட்டத்தை வைத்திருந்தீர்கள்? அதனை தான் உங்களிடம் இருந்து கேட்க விரும்புகிறேன். இதுபோன்ற கதைகளை அல்ல. இப்படியொரு காரணத்தை கூறிவிட்டு தப்பிவிடலாம் என்று நினைக்கிறீர்களா.. வாய்ப்பே இல்லை என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.

-Advertisement-

சற்று முன்