- Advertisement -
Homeவிளையாட்டுகோலியை காலி செய்த தமிழக புயல்.. மயங்க் யாதவுக்கே பிள்ளையார் சுழி போட்ட இளம் வீரர்.....

கோலியை காலி செய்த தமிழக புயல்.. மயங்க் யாதவுக்கே பிள்ளையார் சுழி போட்ட இளம் வீரர்.. யார் இந்த மணிமாறன் சித்தார்த்..

- Advertisement-

முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்த கே. எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு எதிராக நடந்த போட்டியில் வெற்றி கண்டுள்ளது. இதன் காரணமாக தற்போது புள்ளி பட்டியலிலும் நான்காவது இடத்தை லக்னோ பிடித்துள்ள நிலையில் அந்த அணியில் சில வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பந்து வீச்சில் 22 வயதே ஆகும் இளம் வீரர் மயங்க் யாதவ் இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியதுடன் அவர் வீசிய அனைத்து பந்துகளுமே ஏறக்குறைய 150 முதல் 155 கி. மீ வேகத்தில் சென்று வருகிறது. அதே போல பேட்டிங்கிலும் நிக்கோலஸ் பூரன், தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் அவருக்கு உறுதுணையாக சில பேட்ஸ்மேன்களும் நல்ல ஆட்டத்தை ஆடுகின்றனர்.

இதற்கிடையே ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பலரும் மயங்க் யாதவ் பற்றி பேசிக் கொண்டிருக்க தமிழக வீரர் ஒருவர் செய்த சம்பவத்தை தான் தற்போது பார்க்க போகிறோம். தமிழ்நாடு பிரீமியர் லீக் உள்ளிட்ட பல முதல் தர போட்டிகளில் ஆடி கவனம் ஈர்த்த இளம் வீரர் தான் மணிமாறன் சித்தார்த். இவர் தமிழ்நாடு அணிக்காக பல லீக் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ள நிலையில், ஏற்கனவே ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட அணிகளில் இடம் பிடித்திருந்தார்.

ஆனால் அந்த இரண்டு அணிகளில் இருந்த போதிலும் அவருக்கு ஒரு முறை கூட பிளேயிங் லெவனில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையே தான் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தின் போது மணிமாறன் சித்தார்த்தை எடுக்க லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ உள்ளிட்ட அணிகள் கடும் போட்டி போட்டது. இறுதியில் லக்னோ அணி அவரை 2.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்க ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவும் வைத்திருந்தது.

- Advertisement-

இதில் மேக்ஸ்வெல், கிரீன் உள்ளிட்ட விக்கெட்டுகளை எடுத்த மயங்க் யாதவை பாராட்டி வரும் அதே வேளையில் இதற்கு விதை போட்டவராக அமைந்திருந்தார் மணிமாறன் சித்தார்த். அதாவது தொடக்க வீரராக களமிறங்கிய விராட் விக்கெட்டை ஐந்தாவது ஓவரில் பந்து வீசியபோது காலி செய்து அதன் பின்னர் தொடர்ந்து விக்கெட் விழவும் வழிவகை செய்திருந்தார்.

இந்த போட்டியில் மூன்று ஓவர்கள் பந்து வீசி இருந்த மணிமாறன் சித்தார்த், 21 ரன்கள் மட்டுமே கொடுத்து கோலியின் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். லக்னோ அணி தொடர்ந்து இளம் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வரும் நிலையில் மணிமாறன் சித்தார்த்தும் நிச்சயம் பெரிய ஒரு வீரராக வந்து தமிழ்நாட்டிற்கு அதிக பெருமை சேர்ப்பார் என்றும் கருதப்படுகிறது.

சற்று முன்