- Advertisement 3-
Homeவிளையாட்டுIND vs WI: யாருயா இந்த பிரமாண்ட வீரர்.. இந்திய பவுலர்களை திணற வைத்த கார்ன்வால்.....

IND vs WI: யாருயா இந்த பிரமாண்ட வீரர்.. இந்திய பவுலர்களை திணற வைத்த கார்ன்வால்.. பந்துவீச்சிலும் அசத்துவாராம்

- Advertisement 1-

வெஸ்ட் இண்டீஸ் – இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டோமினிக்காவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் கிரைக் பிராத்வெயிட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதற்கு மைதானத்தின் தன்மையும், 3வது நாளில் ஆடுகளம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருக்கும் என்பதே காரணமாக உள்ளது. ஆனால் பேட்டிங் முடிவே அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரன்களுக்கு அஸ்வின் மற்றும் ஜடேஜா சுழலில் சரணடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அறிமுக வீரர் அலிக் அதனேஸ் 99 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் மாமிச மலை என்ற பார்க்கப்படும் ரஹீம் கார்ன்வால் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 19 ரன்களில் எடுத்தார்.

6.5 அடி உயரம், 300 பவுண்ட் எடையுடன் உள்ள கார்ன்வால், களமிறங்கும் போது இந்திய ரசிகர்கள் மிரண்டு போயினர். பார்ப்பதற்கு கிரிக்கெட் வீரருக்கான எந்த அடையாளத்துடன் இல்லாமல் இருந்தாலும், இந்திய பந்துவீச்சாளர்களை எளிதாக சமாளித்து ஆடினார். அதுமட்டுமல்லாமல் கீழ் நிலையில் களமிறங்கி அதிரடியாக ஆடக் கூடிய கார்ன்வால், நேற்றைய ஆட்டத்திலும் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசினார்.

அதிக எடை மற்றும் உயரத்துடன் இருப்பதால் காலில் அட்டாக் செய்யலாம் என்று நினைத்த இந்திய பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக யார்க்கர் பந்துகளை வீசி அட்டாக் செய்தனர். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சரியான சவாலை அளித்தார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்ன்வால்.

- Advertisement 2-

இது இந்திய ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் விரைவாக ரன்கள் சேர்க்க வேகமாகவும் ஓடினார். அதுவும் கூடுதல் ஆச்சரியத்தை அளித்தது. குறிப்பாக காலில் வீசப்பட்ட பந்துகளைல் எளிதாக பவுண்டரிகளை விளாசினார். உனாத்கட், சிராஜ், ஷர்துல் தாக்கூர் என்று வேகப்பந்துவீச்சாளர்களையும், அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழலையும் சமாளித்து ரன்களை சேர்த்தார்.

இன்னும் சொல்லப் போனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மற்ற பேட்ஸ்மேன்களை திணறச் செய்த இந்திய பந்துவீச்சாளர்களால், கார்ன்வால் எதுவுமே செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில் இன்சமாம் உல் ஹக் போல் சிறப்பாக ஆடுவாரோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது. அதேபோல் சிறந்த ஆஃப் ஸ்பின்னரான கார்ன்வால் இந்திய அணிக்கு அச்சுறுத்தல் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கலாம்.

சற்று முன்