அம்பாத்தி ராயுடுவின் இடத்தை அடுத்த சீசனில் நிரப்பப் போவது யார்? இந்த 3 வீரர்களில் யாருக்கு வாய்ப்பு இருக்கும்

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றி ஐபிஎல் தொடரின் சிறந்த அணிகளில் ஒன்று என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. வெற்றிக் கோப்பையோடு இப்போது அணியினர் சென்னையில் உள்ளனர்.

இந்த சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஷயம் தோனியின் ஓய்வு அறிவிப்புதான். ஆனால் தோனி இன்னும் 6 மாத காலம் நேரம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து விளையாடுவதா இல்லை ஓய்வா என்பதை அறிவிப்பேன் எனக் கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

- Advertisement -

ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக சென்னை அணியின் நடுவரிசை வீரர் அம்பாத்தி ராயுடு இந்த சீசனில் ஓய்வை அறிவித்துள்ளார். அவர் இதுவரை மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்காக விளையாடி இரு அணிகளுக்காகவும் சேர்த்து 6 முறை கோப்பையை வென்றுள்ளார். 2010 ஆம் ஆண்டு மும்பை அணிக்காக அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார்.

இதுவரை 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார். பீல்டிங்கில் கில்லியாக வலம் வந்த அவர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அதிரடியாகவும் நிதானமாகவும் விளையாடுவதில் பெயர் பெற்றவர். கோப்பையை வென்றபின்னர் இவரைப் பற்றி பேசிய தோனி “களத்தில் எப்போதும் தன்னுடைய 100 சதவீதத்தைக் கொடுப்பவர்” என பாராட்டியிருந்தார்.

- Advertisement -

இந்த சீசனோடு ராயுடு ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் அடுத்த சீசனில் அவருடைய இடத்தை யார் நிரப்பப் போகிறார் என்ற கேள்வி இப்போதே எழுந்துவிட்டது. அவருக்கான இடத்தில் பென் ஸ்டோக்ஸ் என்ற ஆல்ரவுண்டர் சிஎஸ்கே அணியில் ஏற்கனவே இருக்கிறார். அவர் வெளிநாட்டு வீரர் என்பதால் உள்நாட்டு வீரர்கள் சிலரும் ராயுடுவின் இடத்தை நிரப்பும் வாய்ப்புள்ளது.

இதையும் படிக்கலாமே: தமிழக வீரர் சாய் சுதர்சன பத்தி ரஷீத் கான் சொன்னதெல்லாம் கரெக்ட்தான் போலயே. சிஎஸ்கே-வையே தடுமாற வைக்கற அளவுக்கு இவர்கிட்ட திறமை இருக்கே.

அதில் ஷேக் ரசீத், சேனாபதி மற்றும் நிஷாந்த் சிந்து ஆகிய மூன்று அன்கேப்ட் வீரர்கள் இந்த லிஸ்ட்டில் முன்னணி வகிக்கின்றனர். இவர்கள் மூவருமே உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அதன் மூலம் கவனம் ஈர்த்து சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டவர்கள். ஆனால் இந்த சீசனில் அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. அடுத்த சீசனில் இதில் யாருக்கு வாய்ப்புக் கிடைத்து அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு மிளிர போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

சற்று முன்