- Advertisement -
Homeவிளையாட்டுகே.எல் ராகுலுக்கு பதில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடப்போவது யார்? மூன்று பேருக்கிடையே பலப்பரீட்சை!

கே.எல் ராகுலுக்கு பதில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடப்போவது யார்? மூன்று பேருக்கிடையே பலப்பரீட்சை!

- Advertisement-

சில தினங்களுக்கு முனனர் நடைபெற்ற லக்னோ மற்றும் ஆர்.சி.பி அணிகளுக்கு இடையிலான போட்டியில் பீல்டிங் செய்யும் போது லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார். அந்த போட்டியிலும் பேட்டிங்குக்கு 11 ஆவது ஆளாகதான் வந்தார் ராகுல். அதற்கடுத்த போட்டிகளில் அவர் விளையாடவில்லை.

இப்போது அவர் மருத்துவர் குழுவின் கண்காணிப்பில் மும்பையில் ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் காயம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது ராகுல் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் மற்றும் அடுத்த மாதம் லண்டனில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆகியவற்றில் ராகுல் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு பேட்ஸ்மேனாகவும், இரண்டாவது விக்கெட் கீப்பராகவும் இருக்கும் ராகுலின் இடம் வெற்றிடமாகியுள்ளது. அவருக்கு பதில் யார் அணியில் இடம்பெறப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ராகுலின் இடத்துக்கு மூன்று வீரர்கள் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

சி எஸ் கே அணிக்காக தற்போது விளையாடிவரும் ருத்துராஜ் கெய்க்வாட் முதல் ஆளாக இருப்பார் என்று தெரிகிறது. கடந்த இரண்டு சீசன்களாக ஐபிஎல் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடிவரும் ருத்துராஜுக்கு இன்னும் தேசிய அணியில் போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. சமீபத்தில் நடந்த ரஞ்சி கோப்பை தொடரிலும் தொடர் சதங்கள் விளாசி அசத்தினார். அதனால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என தெரிகிறது.

- Advertisement-

இன்னொரு பக்கம் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக இஷான் கிஷான் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரும் அந்த பட்டியலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் விக்கெட் கீப்பர்களாகவும் இருப்பது கூடுதல் பலமாக அமையும் என்று சொல்லப்படுகிறது. விரைவில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான அணி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

சற்று முன்