- Advertisement -
Homeவிளையாட்டுCSK : 20 வயதே ஆன இலங்கை வீரர் மதீஷா பதிரானாவை தோனி கொண்டாட என்ன...

CSK : 20 வயதே ஆன இலங்கை வீரர் மதீஷா பதிரானாவை தோனி கொண்டாட என்ன காரணம்? – விவரம் இதோ

- Advertisement-

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்றளவும் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். சர்வதேச அளவில் மிகச்சிறந்த கேப்டனாக திகழ்ந்த தோனி ஐபிஎல் வரலாற்றிலும் மிகச்சிறந்த கேப்டனாகவே பார்க்கப்படுகிறார். அவரது தலைமையின் கீழ் விளையாடிய பல வீரர்கள் இன்று இந்திய அணியில் முக்கிய வீரர்களாகவும் திகழ்ந்து வருகின்றனர். அதுமட்டும் இன்றி அவர் பட்டையை தீட்டிய பல வீரர்கள் இன்று உலக தரத்தில் ஜொலித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஏற்கனவே விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தாவன், ஜடேஜா, ஹார்டிக் பாண்டியா, தீபக் சாகர், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாகூர் என ஏகப்பட்ட வீரர்கள் தோனியின் வழிகாட்டுதலின் கீழ் சரியான உத்வேகத்தை பெற்று இன்று பெரிய நட்சத்திர வீரர்களாக திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பு 2023-ஆம் ஆண்டில் சிஎஸ்கே அணிக்காக மிகச் சிறப்பாக தலைமை தாங்கி வரும் அவர் தற்போது சிஎஸ்கே அணியை இந்த ஆண்டு அற்புதமாக வழிநடத்தி வருகிறார்.

நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் தொடரானது கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றினை நெருங்கி உள்ள வேளையில் சென்னை அணியும் பிளே ஆப் சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு சிஎஸ்கே அணியால் கண்டெடுக்கப்பட்ட வீரராக இலங்கையைச் சேர்ந்த 20 வயதான மதீஷா பதிரானா பார்க்கப்படுகிறார். ஏனெனில் இளம் வேகப்பந்து வீச்சாளரான இவர் மலிங்காவைப் போன்றே பந்து வீசுவதாலும், டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு பங்காற்றுவதாலும் அவர் இந்த ஆண்டின் மிகச்சிறந்த வீரராக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் தோனி பதிரானாவை அதிகமாக பாராட்டுவது ஏன்? என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம். எப்பொழுதுமே ஒரு வீரர் குறித்து பெரிய அளவில் பேசாத தோனியே இந்த ஆண்டு பதிரானா குறித்து புகழாரம் சூட்டியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த மும்பை அணிக்கெதிரான போட்டி முடிந்த பிறகு பதிரானா குறித்த கேள்விக்கு பதில் அளித்த தோனி கூறுகையில் :

- Advertisement-

பதிரான போன்று ஒரு வித்தியாசமான ஆக்ஷனில் பந்து வீசும் வேகப்பந்து வீச்சாளர் கிடைப்பது அரிது. அவரைப்போன்ற வீரர்கள் கிடைத்தால் அது ஒரு அணிக்கு பெரிய சாதகம். அதிலும் குறிப்பாக அவரது வித்தியாசமான ஆக்சனை பேட்ஸ்மேன்கள் கணிப்பது மிகவும் கஷ்டம். அதோடு அவர் ஒவ்வொரு போட்டியிலும் சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசுகிறார். அதனால் பதிரானாவிற்கு எதிராக பேட்டிங் செய்வது பேஸ்ட்மேன்களுக்கு கடினமாகவே இருக்கும்.

என்னை பொறுத்தவரை அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயம் விளையாட கூடாது. ஏனெனில் இளம் வீரரான அவரது வித்தியாசமான ஆக்சனால் காயத்தால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அவரை ஐசிசி தொடர்களில் மட்டுமே இலங்கை அணி பயன்படுத்த வேண்டும், முக்கியமான போட்டிகளில் அவரை பயன்படுத்தினால் நிச்சயம் அவர் இலங்கை அணியின் சொத்தாக மாறுவார். எனவே அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு பெரிய பெரிய தொடர்களில் மட்டுமே அவரை விளையாட வைக்க வேண்டும் என தோனி இலங்கை அணிக்கு அட்வைஸ் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்