- Advertisement -
Homeகிரிக்கெட்இந்த ஐபிஎல்-ல் தோனி நான்பேட்டிங் கேப்டனாக செயல்பட்டதற்கான தந்திரம் இது தான். ஆர்.சி.பி-யோடு ஒப்பிட்டு தோனியின்...

இந்த ஐபிஎல்-ல் தோனி நான்பேட்டிங் கேப்டனாக செயல்பட்டதற்கான தந்திரம் இது தான். ஆர்.சி.பி-யோடு ஒப்பிட்டு தோனியின் சிறப்பை புரியவைத்த கிரிக்கெட் நிபுணர் பிரசன்னா அகோரம்

-Advertisement-

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றது. இந்த சீசனில் நாம் பார்த்தால் தோனி கடைசி சில ஓவர்களில் மட்டுமே பேட்டிங் செய்தார். அதற்கு காரணம் அவரது மூட்டு வலி தான் என்று சொல்லப்பட்டாலும் அதற்கு மற்றொரு சுவாரசியமான காரணத்தையும், இளம் வீரர்களுக்கு தோனி முக்கியத்துவத்துவம் அளிப்பதற்கான காரணத்தையும் கிரிக்கெட் ஆலோசகர் பிரசன்னா அகோரம் ஒரு பேட்டியில் கூறுகையில்,

நான்பிலேயிங் கேப்டன் என்ற ஒரு நிலை டென்னிஸ் இருக்கும். அதே போல இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டன் நான்பேட்டிங் கேப்டனாக செயல்பட்டார். அதற்குப்பின் அவருடைய மிக நுட்பமான ஒரு நுண்ணறிவு இருந்தது. இதை நாம் புரிந்து கொள்ள ஆர்சிபி அணியை எடுத்துக் கொள்ளலாம். பாஃப் டு பிளசிஸ், க்ளென் மேக்ஸ்வெல், விராட் கோலி ஆகிய மூவரும் 75% ரன்கள் அடித்தும் அந்த அணி குவாலிபை கூட ஆகவில்லை அதில் அந்த அணியின் கேப்டன் டு பிளசிஸ் மட்டும் இந்த சீசன் முழுக்க 730 ரன்கள் அடித்திருந்தார்.

அந்த அணி செய்த தவறு என்னவென்றால் மூவரை தவிர மற்ற வீரர்களுக்கு பெரிதாக பேட்டிங் செய்யும் வாய்ப்பை தரவில்லை என்பதே. ஆட்டம் எப்படி இருந்தாலும் டு பிளசிஸ் மற்றும் கோலிக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் மேக்ஸ்வெல் தான் பேட்டிங் செய்தார். விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் ஆகிய இருவருமே தொடர்ச்சியாக சிறப்பாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள். அதன் பிறகு மேக்ஸ்வெல்லும் வரும்போது மீதமுள்ள வீரர்கள் பேட்டிங் செய்வதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்ற நிலையில் இருந்தது அதன் காரணமாகத்தான் ஆர்சிபி அணியில் யாருமே ஜொலிக்க முடியவில்லை.

ஆனால் இந்த பக்கம் சிஎஸ்கே-வில் தோனியை எடுத்துக் கொண்டோமானால், அவருக்குத் தெரியும் நாம் நமது கிரிக்கெட் கரியரின் முடிவில் இருக்கிறோம் என்பது. தன்னை நிரூபித்துக் கொள்வதற்கான தருணம் இது அல்ல, அதிகபட்சமாக இன்னும் ஒரு வருடம் கூடுதலாக ஆடலாம் அவ்வளவு தான் எனபதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். அதன் காரணமாக அணியை டெவலப் செய்வதுதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டோடு அவர் இருந்ததாக தெரிகிறது.

-Advertisement-

இறுதிப் போட்டியில் அம்பதி ராயுடு இறங்கிய இடத்தில் மிக சுலபமாக தோனி வந்து பேட்டிங் செய்திருக்கலாம். ஆனால் அவர் வரவில்லை. அதேபோல் மொயீன் அலியை எடுத்துக் கொண்டோமானால் அவர் பல வருடங்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் தோனி சிவம் துபேவை தான் மொயீன் அலிக்கு முன்பாக பேட்டிங் ஆட அனுப்பி வைத்தார். இதன் காரணம் மொயீன் அலியின் வயது 37. அவர் இன்னும் சில ஆண்டுகள் தான் விளையாடுவார் என்பதை தோனி உணர்ந்திருந்தார். அணி அடுத்தகட்டத்துக்கு செல்ல இளம் வீரர்களுக்கு வாய்ப்பை தரவேண்டும் என்பது தான் தோனியின் எண்ணமாக இருக்கும்.

இதே ஆர்.சி.பி-யை எடுத்துக் கொண்டோமானால் கோலிக்கு 35 வயது, டு பிளசிஸ்சுக்கு 38, மேக்ஸ்வெல் 30 வயதை கடந்து விட்டார். கடந்த நான்கு ஆண்டுகளில் எடுத்துக் கொண்டோமானால் சிஎஸ்கே அணியில் ருதுராஜ், ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், டெல்லியில் ரிஷப் பண்ட் இப்படியான இளம் வீரர்கள் பூதாகரமாக வளர்ந்து கேப்டன் ஆகும் நிலையில் எட்டி உள்ளனர். ஆனால் ஆர்சிபி அணியில் இப்படியாக ஒரு வீரரை சொல்ல முடியுமா என்றால் சொல்ல முடியாது.

தோனியை பொறுத்தவரை இன்றைய சூழலை மட்டும் நினைத்து விளையாடுபவர் கிடையாது. அடுத்து என்ன என்பதையும் யோசிக்க கூடியவர். அவர் அடுத்த வருடம் சிஎஸ்கே களத்திற்கு வரும்போது அந்த அணி எப்படி இருக்க வேண்டும் என்பதையும் யோசிக்க கூடியவர். ருத்துராஜ், சிவம் துபே, பதிரான இப்படி எத்தனை வீரர்களை அவர் இந்த வருடம் உருவாக்கி உள்ளார் என்பதை நம் கவனிக்க வேண்டும். இதுதான் ஒரு அணி எதிர்வரும் காலங்களில் அடுத்தடுத்த கட்டத்திற்கு சிறப்பாக முன்னேறிச்செல்ல உதவும்.

இதையும் படிக்கலாமே: ஐபிஎல் முடிந்த கையோடு வேறு ஒரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ருத்துராஜ். அதுவும் எத்தனை கோடிக்கு தெரியுமா? பண மழை தான் போங்க.

ஆர்சிபி அணியில் கோலி, மேக்ஸ்வெல், டு பிளசிஸ் இவர்கள் மூவரை தவிர்த்து வேறு ஒரு பெயரை கேப்டன் பதவிக்கு பரிந்துரைக்க முடியுமா என்றால் முடியாது. இதுதான் தோனியின் தனித்துவம் மற்றும் நான் பேட்டிங் கேப்டனாக அவர் செயல்படவும் இது தான் காரணம் என்கிறார் கிரிக்கெட் அனலிஸ்ட் பிரசன்னா அகோரம்.

-Advertisement-

சற்று முன்