கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி வராமல் வெளியேறிய சென்னை அணியானது இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 16-ஆவது ஐபிஎல் தொடரில் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி டெல்லி அணியை சென்னை அணி வீழ்த்தும் பட்சத்தில் பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பினையும் பிரகாசப்படுத்தி கொள்ளும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் சென்னை அணியின் இந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இளம் வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானா திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் பவர் பிளேவின் போதும், டெத் ஓவர்களில் போதும் மிகச்சிறப்பாக பந்துவீசி சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்கிறார். முகேஷ் சவுத்ரி, தீபக் சாகர், பென் ஸ்டோக்ஸ் என சிஎஸ்கே அணி எதிர்பார்த்த வீரர்கள் யாரும் இந்த தொடரில் பெரிய அளவில் பந்து வீசாமலும், விளையாடாமலும் இருக்கின்றனர்.
இவ்வேளையில் அடிப்படை தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த இளம் வீரரான பதிரானா மிகச் சிறப்பாக பந்துவீசி வருவது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது. அதோடு தோனியும் அவருடன் தோல் மேல் கை போட்டு அன்பாக அவருக்கு எவ்வாறு பந்து வீசவேண்டும் என்ற ஆலோசனைகளையும் போட்டியின் போது கொடுத்து வருகிறார். அந்த வகையில் தோனியின் ஆலோசனைகளை கேட்டு துல்லியமாக பந்து வீசும் பதிரானா தற்போது மிகச்சிறந்த பவுலராகவும் மாறி வருகிறார்.
அதோடு அவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைக்காமல் ஐசிசி தொடர்களில் மட்டும் விளையாட வைத்தால் அவர் மிகப்பெரிய வீரராக உருவெடுப்பார் என்றும் இலங்கை அணிக்கு தோனி ஆலோசனையும் வழங்கியுள்ளார். அந்த அளவிற்கு பதிரானாவின் பந்துவீச்சு மிக அருமையாக இருப்பதாகவும் தோனி உறுதியாக நம்புகிறார். இந்நிலையில் பதிரானா சிஎஸ்கே அணிக்காக எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி 19 வயதுக்கு உட்பட்டோர் இலங்கை அணியில் பதிரானா பிரபலம் ஆவதற்கு முன்னதாகவே பதிரானா விளையாடிய ஒரு வீடியோவை தோனி இணையத்தில் பார்த்துள்ளார். அதனை கவனித்த தோனி மலிங்காவை போன்ற வித்தியாசமான ஆக்ஷனில் இருக்கும் இவர் மிகச்சிறப்பாக பந்து வீசுகிறார் என்று கூறி உடனடியாக சிஎஸ்கே அணியின் நெட் பவுலராக இணைத்துள்ளார்.
அதன் பிறகு சிஎஸ்கே அணியுடன் இணைந்த பதிரானாவை நன்கு பயிற்சி எடுக்க வைத்து ஏலத்தில் எடுக்கும் படியும் தோனி அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். அந்த வகையில் 20 வயதான பதிரானா சென்னை அணியில் தேர்வு செய்யப்பட்டு தற்போது ஐபிஎல் தொடரிலும் அசத்தி வருகிறார். பதிரானா தோனியால் தேர்வு செய்யப்பட காரணமாக இருந்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :
This is the Video MS Dhoni saw and decided to Pick Pathirana in CSK squad .pic.twitter.com/788jdEe2Nm
— MAHIYANK ™ (@Mahiyank_78) May 9, 2023