வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தங்களுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தரவில்லை என ஹர்திக் பாண்டியா பேசிய பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வெளிப்படையாக தங்களுடைய குறையை செய்தாளர்கள் சந்திப்பில் பேசிய அளவுக்கு அங்கு என்ன நடந்தது என்பதை தற்போது பார்க்கலாம்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு போதிய அளவு பணம் இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஹர்திக் பாண்டியா சொன்னது போல் எங்களுக்கு நாங்கள் ஆடம்பரத்தைக் கேட்கவில்லை. அடிப்படை வசதிகளையாவது செய்து கொடுங்கள் என்று தான் கேட்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது இன்று நேற்று அல்ல பல ஆண்டுகளாகவே வெஸ்ட் இண்டீஸ் வரும் அணிகளுக்கு இது நடந்து கொண்டே இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் கூட போதிய வசதிகள் இல்லை என பல அணிகளும் ஐசிசி இடம் குற்றச்சாட்டு இருக்கிறது.
பொதுவாக ஒரு அணி விமானத்திலிருந்து வேறு ஊருக்கு செல்கிறது என்றால் விமானம் புறப்படுகிற நேரத்திற்கு முன்பாக இரண்டு மணி நேரத்துக்கு வருவார்கள். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் இல் ஹோட்டல் வாடகை அதிகமாகிவிடும் என்பதற்காக வீரர்கள் எட்டு மணி நேரம் முன்பே விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயே தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மேலும் இந்திய வீரர்களுக்கு அளிக்கப்பட்ட ஹோட்டலில் உடற்பயிற்சி கூடம் கூட இல்லையாம். மேலும் வீரர்கள் விளையாடும் மைதானங்களில் கழிவறையில் தண்ணீர் கூட வரவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் ஹோட்டலில் இருக்கும் மைதானத்திற்கும் சென்று வரவே ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறதாம். இதே போன்று இந்திய வீரர்களுக்கு என அவர்கள் வல்லுனர்கள் சொல்லும் சாப்பாடுகள் வழங்கப்படும். ஆனால் இங்கு வெறும் பிரட்டும் ஜாமும் மட்டும்தான் வழங்கியிருக்கிறார்கள்.
இதுபோன்ற பல பிரச்சனைகள் வெஸ்ட் இண்டீஸ் இல் தொடர்ந்து நிலவுகிறது. இதில் அடுத்த டி20 உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸ் இல் நடைபெறுவதால் இந்த பிரச்சனைகளை எல்லாம் ஐசிசி தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.