- Advertisement -
Homeவிளையாட்டுஇந்திய அணியில் பல சீனியர் வீரர்கள் இருந்தும் 2007-ல் தோனியை கேப்டன் ஆக்கியது ஏன்? -...

இந்திய அணியில் பல சீனியர் வீரர்கள் இருந்தும் 2007-ல் தோனியை கேப்டன் ஆக்கியது ஏன்? – 16 வருடங்கள் கழித்து சீக்ரெட்டை உடைத்த முன்னாள் செலெக்டர்

- Advertisement-

இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் தோனி என்றால் அது மிகையாகாது. 2007 ஆம் ஆண்டு அவர் கேப்டன் ஆனது முதல், மூன்று ஐசிசி டைட்டில்களை இந்திய அணிக்காக பெற்றுள்ளார். அதாவது 2007 இல் டி20 உலக கோப்பை, 2011 இல் ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி இப்படியாக தோனி மூன்று ஐசிசி டைட்டில்களை பெற்ற பெருமை தோனியை சாரும்.

கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் இவர் கேப்டன் ஆகும்போது இந்திய அணியில் சீனியர் வீரர்கள் இருந்தனர். இருப்பினும் இவருக்கே கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் அப்படி கொடுக்கப்பட்ட கேப்டன் பதவியின் மூலம் இந்திய அணியானது இவரது தலைமையின் கீழ் புதிய உச்சத்தை தொட்டது என்றே கூறலாம்.

பல சீனியர் வீரர்கள் இருக்கும்போது தோனிக்கு எப்படி கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது என்று முன்னாள் இந்திய செலெக்டர் பூபிந்தர் சிங் கூறியுள்ளார். அது குறித்து அவர் கூறுகையில், நாங்கள் ஒரு வீரரை கேப்டனாக தேர்ந்தெடுக்க அவர் கிரிக்கெட்டில் எவ்வளவு புத்திசாலித்தனமாக செயல்படுகிறார், அவரது உடல் மொழி, ஒரு அணியை முன்னின்று வழிநடத்தக் கூடிய திறமை மற்றும் மேலாண்மை திறன் இவை தான் பார்க்க கூடிய ஒன்றாக இருக்கும். நாங்கள் தோனியிடம் அவர் விளையாட்டை அணுகும் முறை, அவருடைய உடல் மொழி, அவர் மற்றவர்களிடம் எப்படி அணுகுகிறார் போன்ற விடயங்களில் அணி வீரர்களிடமிருந்து நல்ல ஒரு ஃபீட்பேக்கை பெற்றோம். அதனால்தான் அவரை கேப்டன் ஆக்கினோம் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தோனி கேப்டனாக இருந்த சமயத்தில் அவர் இன்று இந்திய அணியில் சிறப்பாக இருக்கும் பல வீரர்களை அன்றே மெருகேற்றி உள்ளார். குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவரை கூறலாம். அவர் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஆர்டரை மாற்றி அவரை ஓப்பனராக களம் இறக்கினார். தோனியின் இந்த ஐடியா இந்திய அணிக்கு ஒரு மிகச்சிறந்த ஒப்பனரை கொடுத்தது என்றே கூறலாம்.

- Advertisement-

தோனியின் கேப்டன்சி குறித்து விராட் கோலி ஒரு முறை கூறுகையில், செலக்ட்டர்ஸ் என்னை டீமிலிருந்து டிராப் செய்ய நினைத்தபோது தோனி தான் எனக்கு பக்கபலமாக இருந்து என்னை அணியிலேயே வைத்திருந்தார் என்று அவர் கூறியிருந்தார். தற்போது இந்திய அணியில் கோலியின் செயல்பாட்டை குறித்தும் அவருடைய முக்கியத்துவம் குறித்தும் நாம் கூற வேண்டியது இல்லை. தோனி அப்போதே முன்னோக்கி சிந்தித்து எவ்வளவு பெரிய வீரரை இந்திய அணிக்கு இப்போது கொடுத்துள்ளார் என்பதை நாம் உணரலாம்.

ஆனாலும் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு இந்திய அணி ஒரு ஐசிசி டைட்டிலை கூட வெல்லவில்லை என்பது வருத்தமான ஒரு விடயம் தான். கோலியின் தலைமையின் கீழ் இந்திய அணி இரண்டு பைனல்களையும் ஒரு செமி பைனலையும் விளையாடியது அதேபோல் ரோகித் சர்மாவின் தலைமையின் கீழ் ஒரு செமி பைனலையும் ஒரு பைனலையும் ஐசிசி டைட்டிலுக்காக விளையாடியது ஆனால் எதிலும் இந்திய அணி வெற்றி பெறவில்லை என்பதுதான் வருந்துத்தக்க ஒரு விடயமாக உள்ளது.

சற்று முன்