- Advertisement -
Homeவிளையாட்டுருத்துராஜ் நல்ல ஃபார்ம்ல இருந்தும்.. அவருக்கு வாய்ப்பு கிடைக்காம இருக்க ஒருத்தர் மட்டும் தான் காரணம்.....

ருத்துராஜ் நல்ல ஃபார்ம்ல இருந்தும்.. அவருக்கு வாய்ப்பு கிடைக்காம இருக்க ஒருத்தர் மட்டும் தான் காரணம்.. வெளியான தகவல்..

- Advertisement-

ஐபிஎல் உள்ளிட்ட பல தொடர்களின் தாக்கம் காரணமாக இந்திய அணியில் தற்போது அனைத்து இடங்களுக்கும் ஏராளமான வீரர்கள் போட்டி போட்டு வருகின்றனர். ஒரு தொடரில் ஒரு பொசிஷனில் ஆடும் வீரர் அடுத்த தொடரில் அதே இடத்தில் ஆட வேண்டும் என்றால் தனது திறனை குறைந்த போட்டிகளில் நிரூபித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் நிச்சயம் அவருக்கான வாய்ப்பும் இந்திய அணியில் மறுக்கப்படும் சூழல் தான் இருந்து வருகிறது.

மேலும் அடுத்து இருக்கும் இளம் வீரர்கள் அந்த இடத்தை அசால்டாக தட்டி பறித்தும் வருகின்றனர். மிக சிறந்த உதாரணமாக இதற்கு சொல்ல வேண்டும் என்றால் விக்கெட் கீப்பர் இடத்தில் ரிஷப் பந்த் தற்போது அனைத்து வடிவிலும் இடம்பிடித்து ஆடி வருவதால் சஞ்சு சாம்சன், துருவ் ஜூரேல் என பல வீரர்களுக்கான வாய்ப்புகள் குறைந்து வருகிறது.

இப்படி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்தில் என்ன சிக்கல் இருக்கிறதோ அதே போல தான் பேட்டிங், சுழற்பந்து வீச்சு, வேகப்பந்து வீச்சு என அனைத்திலும் ஒரு சிக்கல் தொடர்ந்து இருந்து கொண்டே தான் வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் தொடக்க வீரர் இடத்தில் ஆடுவது.

இந்திய அணியை பொருத்த வரையில் டி20 போட்டிகளில் ரோஹித் ஷ்ர்மா ஓய்வினை அறிவித்தாலும் மற்ற இரண்டு வடிவிலும் அவர் தொடக்க வீரராக ஆடி வருகிறார். அவருடன் கில் அல்லது ஜெயஸ்வால் தொடக்க வீரராக களமிறங்கி வரும் நிலையில் ருத்துராஜ் நல்ல ஃபார்மில் இருந்தும் அவருக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement-

இந்த நிலையில் தான் ருத்துராஜ் இடம் குறித்து ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “ருத்துராஜுக்கு நிறைய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அது ஒரு பக்கம் இருக்க அவர் பேட்டிங்கிலும் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். நேராக டிரைவ் செய்வது, கட் ஷாட்ஸ் மற்றும் புல் ஷாட் என அனைத்தும் பார்ப்பதற்கே அருமையாக உள்ளது. டெக்னிக்கலாக ஒரு சிறந்த பேட்ஸ்மேன் தான் ருத்துராஜ்.

ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் தவறான பாதையிலே இருக்கிறார். கில் ருத்துராஜிடம் இருந்து பல தூரம் முன்னோக்கி இருக்கிறார். இந்திய அணியின் பயிற்சியாளர்கள், தேர்வுக்குழு தலைவர்கள், கேப்டன் என அனைவருமே சுப்மன் கில்லை அடுத்த கேப்டன் மற்றும் சூப்பர் ஸ்டார் என முடிவு செய்துவிட்டனர்.

டெஸ்ட் கிரிக்கெட் பற்றி பேச வேண்டும் என்றால் நிறைய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை இந்திய அணிக்காக வெளிப்படுத்தியுள்ளனர். இந்திய அணியின் பேட்டிங் வரிசையும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக இருப்பதால் தற்போது ருத்துராஜிற்கு அங்கேயும் இடம் இல்லை.

இந்திய அணி இனி கொஞ்ச காலம் ஒருநாள் போட்டி ஆடவில்லை என்பதால் ருத்துராஜிற்கான இடமும் இருக்காது. விராட் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வினை பெற்றாலும் ருத்துராஜை விட ஆக்ரோஷமாக பேட்டிங் வெளிப்படுத்துபவர்களுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும்” என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

சற்று முன்