- Advertisement -
Homeவிளையாட்டுசோதிக்காதிங்கடா என்னைய.. 140 கிலோ வெயிட்ட வச்சிக்கிட்டு ஓடறதே பெரிய விஷயம்.. இதுல ரன் அவுட்...

சோதிக்காதிங்கடா என்னைய.. 140 கிலோ வெயிட்ட வச்சிக்கிட்டு ஓடறதே பெரிய விஷயம்.. இதுல ரன் அவுட் வேறயா..

- Advertisement-

இந்தியாவில் ஆண்டு தோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருவது போன்று வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் கரீபியன் லீக் தொடர்பானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான கரீபியன் லீக் போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியும் பார்படாஸ் ராயல்ஸ் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த செயின்ட் லூசியா கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. செயின்ட் லூசியா கிங்ஸ் அணி சார்பாக சீன் வில்லியம்ஸ் 47 ரன்களையும், டூபிளெஸ்ஸிஸ் 46 ரன்களையும் குவித்தனர்.

பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கிய பார்படாஸ் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 147 ரன்களை மட்டுமே குவித்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் பார்படாஸ் அணியை சேர்ந்த துவக்க வீரரான ரஹீம் கார்ன்வால் போட்டியின் முதல் பந்திலேயே பரிதாபமாக ரன் அவுட்டான நிகழ்வு தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் உலகின் மிக அதிக எடை கொண்ட வீரராக பார்க்கப்படும் ரஹீம் கார்ன்வால் பவுண்டரிகள் அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

- Advertisement-

பொதுவாகவே ரன்னிங் ஓடாமல் அடித்து விளையாடும் அவர் நேற்றைய போட்டியின் முதல் பந்தினை லெஃக் சைடு அடித்து விட்டு ரன் ஓட நினைத்தார். ஆனால் பந்தினை சரியாக பிடிக்க தவறிய பீல்டர் சறுக்கினார்.

பின்னர் சுதாரித்துக்கொண்ட பீல்டர் மீண்டும் பந்தினை எடுத்து த்ரோ செய்ய பொறுமையாக ஓடிய ரஹீம் கார்ன்வால் பரிதாபமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். அவர் ரன் அவுட்டான இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருவது மட்டுமின்றி கிண்டல்களையும் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்