- Advertisement -
Homeவிளையாட்டுCSK Vs MI: சி.எஸ்.கே vs மும்பை இந்தியன்ஸ் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பா? ரசிகர்களை...

CSK Vs MI: சி.எஸ்.கே vs மும்பை இந்தியன்ஸ் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்பா? ரசிகர்களை வயிற்றில் புளியைக் கரைக்கும் தகவல்!

- Advertisement-

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 இன் 49வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மாலை 3.30 மணிக்கு மோதுகின்றன. இந்த பரபரப்பான ஆட்டம் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தது.

கடந்த ஆண்டு மோசமான தோல்விகளைக் கொண்ட சீசனுக்குப் பிறகு, சி எஸ் கே சிறப்பாக விளையாடி ப்ளே ஆஃப் செல்வதற்கான முயற்சியில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஆடிய 10 ஆட்டங்களில் ஐந்தில் வெற்றி பெற்று 11 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான சூப்பர் கிங்ஸ் அணி மழையால் முடிவில்லாமல் போனது. 19.2 ஓவர்களில் 125/7 என்று எதிரணியை கட்டுப்படுத்தியதால், பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை அற்புதமாகச் செய்தனர். மொயீன் அலி ஒரு சிக்கனமான பந்துவீச்சில் CSK க்காக இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார். இருப்பினும், மழையின் காரணமாக இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொண்டன.

இந்நிலையில் சிஎஸ்கே வின் அடுத்த போட்டியும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. சென்னையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை மழையால் போட்டி பாதிக்கப்பட்டால் அது சி எஸ் கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும்.

- Advertisement-

ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை சி எஸ் கேவும் மும்பையும் இரண்டு சூப்பர் ஸ்டார் அணிகள். இரு அணிகளும் சேர்ந்து 9 முறை கோப்பையை வென்றுள்ளன. சென்னை அணியை அதிகமுறை வெற்றி பெற்ற அணி என்ற பெருமையும் மும்பை இந்தியன்ஸ் வசமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்