ப்ளேயிங் லெவனில் மாற்றம் செய்வாரா தோனி? யாரை மாற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன? முழு விவரம்

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தங்களுடைய கடைசி லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடப்பதால் டெல்லி அணிக்கு கூடுதல் அனுகூலங்கள் உள்ளன. இந்த போட்டியை எப்படியும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. ஏனென்றால் அப்போதுதான் எந்த சிக்கலும் இன்றி ப்ளே ஆஃப் செல்ல முடியும்.

போட்டியில் தோற்கும் பட்சத்தில் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகள், ரன்ரேட் ஆகியவற்றை பார்த்துக் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். சென்னை அணியைப் பொறுத்தவரை பேட்டிங், பீல்டிங் மற்றும் பவுலிங் என அனைத்து யூனிட்டிலும் சிறப்பான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் திறமைக்கேற்ப இன்னிங்ஸ்களை விளையாடுவதில்லை. ஒரு வீரர் சிறப்பாக விளையாடினால், மீதமுள்ள வீரர்கள் சொதப்புகிறார்கள்.

- Advertisement -

கடந்த சில போட்டிகளாக ருத்துராஜ் ஃபார்மில் இல்லாமல் தடுமாறுகிறார். டெவான் கான்வே நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடுகிறார். காயம் காரணமாக 11 போட்டிகளில் விளையாடாத பென் ஸ்டோக்ஸ் இன்றைய போட்டியில் களமிறங்குவாரா என்ற கேள்வியும் உள்ளது.  ஒருவேளை அவர் களமிறங்கினால் தீக்‌ஷனா அல்லது மொயின் அலி ஆகிய இருவரில் ஒருவர் பென்ச்சில் உட்கார வைக்கப்படலாம். இன்றைய போட்டியோடு பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து திரும்புகிறார் என்று சொல்லப்படுகிறது. அது அணிக்கு மேலும் பின்னடைவாக அமையும்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை தீபக் சஹார் பவர் ப்ளே ஓவர்களில் சிறப்பாக வீசி விக்கெட்களை எடுக்கிறார். அதே போல டெத் ஓவர்களில் மதிஷா பதிரனா சிறப்பான பங்களிப்பைக் கொடுத்து வருகிறார். மற்ற பவுலர்களான தேஷ்பாண்டே, தீக்‌ஷனா ஆகியோர் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதனால் தீக்‌ஷனாவுக்கு பதில் சாண்ட்னர் அணியில் வந்தால் பவுலிங் யூனிட் கூடுதல் பலம் பெறலாம் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் தோனி அந்த மாற்றத்தை செய்வாரா என்பது கேள்விக்குறிதான்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: ஒரே வெற்றியின் மூலம் பெங்களூரு மற்றும் மும்பை அணிக்கு செக் வைத்த ராஜஸ்தான் – விவரம் இதோ

பேட்டிங்கை பொறுத்தவரை நடுவரிசையில் ஷிவம் துபே அதிரடியாக விளையாடுகிறார். ஆனால் அவரிடம் இருந்து பெரிய இன்னிங்ஸ்கள் தேவை. ஜடேஜா, மொயின் அலியும் பெரிய அளவில் ஸ்கோர்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ரஹானே சில போட்டிகளில் அதிரடியாக விளையாடிவிட்டு அமைதியாகிவிட்டார். அவரிடம் இருந்தும் ஸ்கோர்கள் வரவேண்டும். எப்படி பார்த்தாலும் டெல்லி அணியை விட சிஎஸ்கே பலம் பொருந்திய அணியாகதான் உள்ளது என்பது ரசிகர்களுக்கு ஆறுதல்.

- Advertisement -

சற்று முன்