ரிசர்வ் டேவான இன்றும் மழை பெய்யுமா? அகமதாபாத் மைதானத்தின் வெதர் ரிப்போர்ட் சொல்வது என்ன? ஒருவேளை மழை பெய்தால் என்னவாகும்?

- Advertisement -

நேற்று நடைபெற்று இருக்க வேண்டிய ஐபிஎல் இறுதிப் போட்டி கனமழை காரணமாக ரிசர்வ் நாளான இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியைக் காண வந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் 15 ஆவது சீசன் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிகள் மோத இருந்தன. இந்த போட்டி நேற்று முழுவதும் பெய்த கனமழையால் டாஸ் கூட வீசப்பட்டாமல் பாதிக்கப்பட்டது.

- Advertisement -

மழை நின்றால் ஓவர்கள் குறைத்தோ அல்லது சூப்பர் ஓவர் மட்டுமோ வீசப்பட்டோ போட்டி நடைபெற்றிருக்கும். ஆனால் அதற்கு கொஞ்சம் கூட மழை இடம் கொடுக்கவில்லை. ஒருவேளை இன்றும் மழையால் போட்டி பாதிக்கப்பட்டால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது அல்லது கோப்பையை இருவரும் பிரித்துக்கொள்ளும்படியும் இருக்கலாம்.

இதனால் திங்கள் கிழமையான இன்றும் மழை பெய்து போட்டியை பாதிக்குமோ என்ற அச்சம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால் அப்படி நடக்க வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறியுள்ளன. இன்று போட்டி நடக்கும் அகமதாபாத்தில் பகலில் மழை பெய்ய 10 சதவீதம் வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாக பிபிசி வெதர் ரிப்போர்டில் சொல்லப்படுகிறது. பகலில் அதிகபட்சம் 37 டிகிரி வரை வெயில் அடிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

மாலை 6.30 மணியில் இருந்து 7.30 மணி வரை மழை பெய்ய 7% வாய்ப்பு இருப்பதாகவும் அதன் பிறகு இரவு 9.30 வரை 5% வாய்ப்பு இருப்பதாகவும். இரவு 11.30 வரை 4% வாய்ப்பு இருப்பதாகவும் பிபிசியின் வானிலை அறிக்கையில் சொல்லப்படுகிறது. ஆனால் இதில் மாறுபாடுகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை மழை பெய்தால் போட்டி முழு 20 ஓவர் போட்டியாக இல்லாமல் ஓவர்கள் குறைத்து நடக்க வாய்ப்புள்ளது.

இதுவரை நடந்துள்ள ஐபிஎல் போட்டிகளில் மழைக் காரணமாக எந்தவொரு இறுதிப் போட்டியும் பாதிக்கப்பட்டு கோப்பை ஒரு அணிக்கு வழங்கப்பட்டதில்லை. இந்நிலையில் முதல் முறையாக அப்படி ஒரு சூழல் உருவாகிவிடுமோ என்ற அச்சம் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அதிகளவில் உள்ளது.

- Advertisement -

சற்று முன்