12 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே. அணி 7 போட்டிகளில் வெற்றி, 4ல் தோல்வி மற்றும் ஒரு போட்டியில் முடிவு தெரியாததால் 15 புள்ளிகளோடு புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் கிட்டத்தட்ட சென்னை ப்ளே ஆஃப் செல்வது உறுதியாகியுள்ளது. சி.எஸ்.கே. கேப்டன் தோனி, போட்டிகளில் கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கிய சில பந்துகளே பேட் செய்கிறார் என்ற வருத்தமும் ரசிகர்களிடம் உள்ளது.
இந்நிலையில் சென்னை அணி சமீபத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் கடைசியாக களமிறங்கிய அணியின் கேப்டன் தோனி, 2 சிக்ஸர்கள் உள்பட 9 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.
சி.எஸ்.கே அணியின் போட்டிகள் சேப்பாக்கத்தில் நடப்பதைக் காண்பது என்பது சென்னை ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவைப் போல அமைந்தது. இத்தோடு இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் என்ற கருத்தும் பரவ, தோனிக்கு சிறப்பான விடை கொடுக்க வேண்டுமென்று ரசிகர்கள் மஞ்சள் படையாக மைதானத்துக்கு குழுமி வருகின்றனர்.
சென்னை அணியின் போட்டிகளில் ஏதாவது ஒரு தருணம் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் டெல்லி அணியுடனான போட்டியில் மைதானத்தில் காணப்பட்ட இளம் பெண் ஒருவர் திடீரென்று எந்த காரணமும் இல்லாமல் சமூகவலைதளங்களில் வைரல் ஆகியுள்ளார்.
போட்டியின் போது சில வினாடிகள் மட்டுமே அந்த பெண் திரையில் காட்டப்பட்டார். அவரின் டிரடிஷனலான உடையும், சாந்தமான முகமும் உடனே ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது. அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆக, உடனே எப்படியோ தேடி அவரின் சமூகவலைதளப் பக்கத்தை கண்டுபிடித்து ஏகப்பட்டபேர் பாலோ செய்ய ஆரம்பித்து விட்டார்கள். இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் தோன்றினால் அவரையும் நம் ரசிகர்கள் ஒரு செலிபிரிட்டி ஆக்கிவிடுவார்கள் போல இருக்கிறது.