- Advertisement -
Homeவிளையாட்டுசி.எஸ்.கே போட்டியின் நடுவே மலர்ந்த காதல். என் ஆள கண்டு பிடிச்சி தாங்க என கோரிக்கை...

சி.எஸ்.கே போட்டியின் நடுவே மலர்ந்த காதல். என் ஆள கண்டு பிடிச்சி தாங்க என கோரிக்கை வைத்த பெண். CSK நிர்வாகம் அளித்த பதில்.

- Advertisement-

சில நாட்களுக்கு முன்னர் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே தோற்ற வருத்தத்தில் ஒட்டுமொத்த சிஎஸ்கே அணி ரசிகர்களும் இருக்க ஒரு பெண் மட்டும் வேறொரு வருத்தத்தில் இருக்கிறார்.

இது சம்மந்தமாக அந்த பெண் செய்துள்ள ட்வீட் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அந்த பெண் தனது ட்வீட்டில் “நான் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய போட்டியில் ஒரு அழகான பையனைப் பார்த்தேன். நான் ஐ கேலரியில் கீழே X வரிசையில் இருந்தேன். அந்த பையன் Y வரிசையில் இருந்தான். அவனின் சீட் நம்பர் 30க்கும் 60க்கும் இடையில் இருக்கும்.

- Advertisement -

நாங்கள் பலமுறை பார்த்துக் கொண்டோம். அந்த பையன் ஷார்ட்ஸும் டி ஷர்ட்டும் அணிந்திருந்தான். எனக்கு அந்த பையனைக் கண்டுபிடிக்க உதவுங்கள்” என ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட் வைரலாக பலரும், சில புகைப்படங்களை இணைத்து இதில் இருக்கும் பையனா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையெல்லாம் விட உச்சமாக அந்த பெண்ணின் ட்வீட்டுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் பதிலளித்திருப்பதுதான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிஎஸ்கே அணியின் அந்த ட்வீட்டில் “அந்த போட்டி எங்களுக்குதான் நல்லபடியாக அமையவில்லை. உங்களுக்காவது நல்லபடியாக அந்த பையன் கிடைக்கட்டும்” என ட்வீட் செய்துள்ளது.

- Advertisement-

தற்போது கிரிக்கெட் போட்டிகளின் போது கேலரிகளில் இதுபோல ரொமாண்டிக்கான சம்பவங்கள் அதிகமாக நடக்க ஆரம்பித்துள்ளன. முன்பெல்லாம் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் மைதானத்தில் இருக்கும் ஒரு ஆண் பெண் ஜோடியைக் காட்டினால் அவர்கள் முத்தமிட்டுக் கொள்வது வாடிக்கை. அதுபோல மைதானத்தில் வைத்து காதலர்கள் தங்கள் ஜோடிக்கு காதலை வெளிப்படுத்துவதும் நடந்து வந்தது.

இதையும் படிக்கலாமே: தோனியின் முழங்கால் பிரச்சனை தற்போது எப்படி உள்ளது? சிஎஸ்கே பேட்டிங் கோச் மைக் ஹஸ்ஸி கூறிய தகவல்

அந்த வரிசையில் இந்த பெண்ணின் மனம் கவர்ந்த அந்த இளைஞரும் அவருக்குக் கிடைப்பாராரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது அந்த பெண் வைரல் ஆக வேண்டுமென்பதற்காக அப்படி போலியாக ட்வீட் செய்தாரா என்ற் கேள்வியும் எழுந்துள்ளது.

சற்று முன்