- Advertisement 3-
Homeவிளையாட்டுபாக்கிஸ்தான் அணி செமி பைனல் போக என்னவெல்லாம் நடக்கணும். கொஞ்சம் பிசிறு தட்டனாலும் சோலி முடிஞ்சுது

பாக்கிஸ்தான் அணி செமி பைனல் போக என்னவெல்லாம் நடக்கணும். கொஞ்சம் பிசிறு தட்டனாலும் சோலி முடிஞ்சுது

- Advertisement 1-

உலகக் கோப்பை 2023 தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. எனினும், அரையிறுதிக்கு முன்னேறப்போகும் 2 அணிகள் யார் யார் என்ற கேள்விக்கு இதுவரை தீர்க்கமான முடிவு கிடைக்காமலேயே உள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டும் அரையிறுதி சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறி விட்டன.

அந்த வகையில், அரையிறுதி சுற்றுக்கு முன்னேற போகும் அடுத்த இரண்டு அணிகள் எவை என்பதை தீர்மானிக்கும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் என கிட்டத்தட்ட நான்கு அணிகளிடையே போட்டி நிலவுகிறது.

நேற்றைய போட்டியை பொருத்தவரை பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை டக்வெர்த் லீவிஸ் முறையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி பாகிஸ்தான் பந்துவீச்சை திணறிடித்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 401 ரன்களை குவித்தது.

பிறகு, 402 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஜமான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஃபகர் ஜமான் 81 பந்துகளில் 126 ரன்களை விளாசினார். கேப்டன் பாபர் அசாம் 66 ரன்களை குவித்தார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 25.3 ஓவர்கள் முடிவில் வெறும் 1 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை குவித்து இருந்தது.

- Advertisement 2-

நேற்று நியூசிலாந்து அணியுடனான போட்டியில் வெற்றி பெற்றதால், பாக்கிஸ்தான் அணி தனது அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இன்னும் என்னவெல்லாம் நடக்க வேண்டும் என்ற விவரங்களை விரிவாக பார்ப்போம்.

இங்கிலாந்து அணியுடனான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும். இலங்கை அணி நியூசிலாந்து அணியை வீழ்த்த வேண்டும். ஆப்கானிஸ்தான் அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோல்வுற்று, அவர்களின் நெட் ரன்ரேட் குறைவாக இருக்க வேண்டும்.

ஒருவேளை நெட் ரன்ரேட் நியூசிலாந்து அணியுடன் சமனாக இருக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை குறைந்த பட்சம் 130 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற வேண்டும். இதுவெள்ள நடத்தால் பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதி வாய்ப்பு உறுதி என்றே கூறலாம்.

சற்று முன்