- Advertisement -
Homeவிளையாட்டுஇனி சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பே இல்லை.. ரோகித் சர்மாவே தெளிவா சொல்லிட்டாரு

இனி சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பே இல்லை.. ரோகித் சர்மாவே தெளிவா சொல்லிட்டாரு

- Advertisement-

உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியின் மிடில் ஆர்டரில் எந்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்வி ரசிகர்களிடையே விவாதமாக மாறியுள்ளது. ஏனென்றால் கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஆசிய கோப்பை தொடருக்கும் இந்திய அணி திரும்ப மாட்டார்கள் என்று சொல்லப்பட்டு வருகிறது.

இவர்களின் காயம் மற்றும் பயிற்சி குறித்து பேசிய ரோகித் சர்மாவும், எந்த தகவலையும் உறுதியாக கூறவில்லை. இதன் காரணமாக சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோரில் இரண்டு பேர் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடம்பெற வாய்ப்புள்ளதாக ரசிகர்களிடையே விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பற்றி ரோகித் சர்மா பேசும் போது, இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தீவிரமாக உழைத்து வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டை புரிந்துகொள்ளவும், அந்த மனநிலைக்கு மாறவும் முயன்று வருகிறார். இதற்காக அதிக ஒருநாள் போட்டிகளை விளையாடிய வீரர்களுடன் ஆலோசித்து வருகிறார்.

அதனால் சூர்யகுமார் யாதவை உடனடியாக எடைபோடாமல் அவருக்கு கூடுதல் வாய்ப்புகளை அளிக்க விரும்புகிறோம். அவர் ஒருநாள் கிரிக்கெட் மனநிலைக்கு மாறவும், கான்ஃபிடன்ஸ் பெறவும் வாய்ப்பளிக்க வேண்டிய நிலை உள்ளது. ஐபிஎல் தொடரின் போது சூர்யகுமார் யாதவின் பேட்டில் இருந்து முதல் 5 ஆட்டங்களில் பெரியளவில் ரன்கள் வரவில்லை.

- Advertisement-

ஆனால் ஐபிஎல் தொடர் முடிவடையும் போது சூர்யகுமார் யாதவ் என்ன செய்ய முடியும் என்று நிரூபித்தார் என்று தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா அளித்துள்ள பேட்டியில் தப்பி தவறி கூட சஞ்சு சாம்சனின் பெயரை கூட சொல்லவில்லை. இதன் மூலம் அடுத்து வரும் ஆசிய கோப்பைத் தொடரிலும் சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

சூர்யகுமார் யாதவ் விளையாடியுள்ள கடைசி 24 ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 24.33 பேட்டிங் சராசரியுடன் வெறும் 511 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இருப்பினும் சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்