இம்ஃபேக்ட் பிளேயர் குழப்பம்… பேண்டை திருப்பி போட்டு மைதானத்தில் களமிறங்கிய சஹா!

- Advertisement -

ஐபிஎல் சீசன் 16-ன் 51 ஆவது போட்டி நேற்று குஜராத அகமதாபாத் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடந்தது. போட்டியில் குஜராத், 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 2விக்கெட்களை மட்டுமே இழந்து 227 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணி  பேட்ஸ்மேன் சஹா சிறப்பாக பேட் செய்து 43 பந்துகளில் 81 ரன்கள் அதிரடியாக சேர்த்தார். அதே போல மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் 94 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த சீசனின் அதிக ஸ்கோர் கொண்ட இன்னிங்ஸ்களில் ஒன்றாக குஜராத் அணியின் இன்னிங்ஸ் அமைந்தது.

- Advertisement -

இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணியில் ஆரம்பத்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்தனர் தொடக்க ஆட்டக்காரர்கள் டிகாக்கும் கைல் மேயர்ஸும். முதல் விக்கெட்டுக்கு அவர்கள் 88 ரன்கள் அதிரடியாக சேர்த்தனர். ஆனால் இந்த விக்கெட் விழுந்ததும் அடுத்து சீரான் இடைவெளியில் விக்கெட்கள் விழுந்ததும், ரன்ரேட் அதிகரித்துக் கொண்டே சென்றதும்  போட்டி மெல்ல மெல்ல குஜராத் அணியின் கைகளுக்கு சென்றது. இதனால் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து லக்னோ அணி 171 ரன்க்ள் மட்டுமே சேர்த்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் அதிரடியான ஒரு இன்னிங்ஸ் ஆடிய விருத்திமான் சஹா, தன்னுடைய மற்றொரு செயலால் மைதானத்தில் இருந்தவர்களை சில நிமிடங்கள் சிரிக்க வைத்தார். அவர் நீண்ட இன்னிங்ஸை விளையாடியதால், அவருக்கு பதிலாக மாற்று வீரராக கே எஸ் பரத்தை இம்பேக்ட் ப்ளேயராக இறக்கலாமா என கேப்டன் ஹர்திக் பாண்ட்யா யோசித்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரையே விக்கெட் கீப்பராக வர அழைத்தார். இதனால் அவசர அவசரமாக மைதானத்துக்கு வந்த அவர், தன்னுடைய பேண்ட்டை திருப்பிப் போட்டு வந்துவிட்டார்.

- Advertisement -

இதைப்பார்த்து தன் அணியினர் சிரித்ததைப் பார்த்ததும்தான் தன்னுடைய தவறை உணர்ந்து அவரும் சிரிக்க ஆரம்பித்தார். ஆனால் நேரமின்மைக் காரணமாக அப்படியே பேண்ட்டை அணிந்தே அவர் முழு இன்னிங்ஸும் தன்னுடைய விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார். இது சம்மந்தமான வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

- Advertisement -

சற்று முன்