அடடா கண்கொள்ளா காட்சி. மின்னல் வேகத்தில் சஹா பிடித்த அற்புத கேட்ச் – வீடியோ!

- Advertisement -

ஐபிஎல் 16 சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. பாதி போட்டிகளுக்கு மேல் நடந்து முடிந்துள்ள நிலையில் எந்தந்த அணிகள் ப்ளே ஆஃப்க்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 44 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 130 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

முதலில் பேட் செய்த டெல்லி அணி முதல் ஓவரிலேயே பில் சால்ட் விக்கெட்டை முதல் பந்திலேயே இழந்தது. அடுத்த ஓவரில் தேவையில்லாமல் ரன் எடுக்க முயன்று வார்னர் ரன் அவுட் ஆனார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்கள் விழுந்ததால் டெல்லி பேட்ஸ்மேன்கள் அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

- Advertisement -

மற்றொரு முனையில் தனது ஸ்விங் பந்துகளால் ஒரு மாயாஜாலத்தையே நிகழ்த்தினார் குஜராத் பவுலர் முகமது ஷமி. அடுத்தடுத்து விக்கெட்களை கைப்பற்றிய அவர் ஐந்தாவது ஓவரை வீசிய போது டெல்லி பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டே பந்தை எதிர்கொண்டார். அப்போது ஷமி வீசிய அவுட் ஸ்விங் பந்தை அவர் லேசாக தொட, அந்த பந்து எட்ஜ் ஆகி கீப்பருக்கும் முதல் ஸ்லிப்புக்கும் இடையில் சென்றது. அதனால் அந்த பந்தை இருவராலும் பிடிக்க முடியாது என நினைத்த நேரத்தில் மின்னல் வேகத்தில் பாய்ந்து ஒற்றைக் கையால் அந்த கேட்ச்சை லாவகமாக எடுத்தார் சஹா. இந்த காட்சி ஒரு மேஜிக் தருணம் போல இருக்க, மைதானமே ஆர்ப்பரித்து சஹாவைப் பாராட்டியது.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாகவே விக்கெட் கீப்பிங் திறமைகள் அதிகமாகக் கொண்ட கீப்பர்களை அணிகள் கண்டுகொள்வதில்லை. கூடுதல் திறமையாக பேட்டிங்கும் இருக்க வேண்டும். தோனி, கில்கிறிஸ்ட், சங்ககரா போன்றோரின் வருகைக்குப் பிறகு இதுதான் யதார்த்தமாக உள்ளது. ஆனால் சஹா பேட்டிங்கை விட விக்கெட் கீப்பிங் திறமைகள் அதிகம் வாய்க்கப் பெற்றவர். இதனாலேயே திறமை இருந்தும் இந்திய அணியில் அவரால் இடம்பெற முடியவில்லை என்பது துயரமான ஒன்று.

- Advertisement -

சற்று முன்