- Advertisement -
Homeவிளையாட்டுWTC Final: சுப்மன் கில் ஆல்ரெடி தடுமாறி இருக்காரு. அவருக்கு இந்த மாதிரி ஒரு பால்...

WTC Final: சுப்மன் கில் ஆல்ரெடி தடுமாறி இருக்காரு. அவருக்கு இந்த மாதிரி ஒரு பால் போட்டா போதும், ஈஸியா காலி ஆகிடுவாரு. அதுக்கு ஆஸ்திரேலிய பௌலர்கள் இத செய்யணும் – கிரேக் சேப்பல் கருத்து

- Advertisement-

சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியானது வரும் ஜூன் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த இறுதிப்போட்டிக்கான இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் ஏற்கனவே இங்கிலாந்து சென்றடைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த இறுதி போட்டியில் எந்தெந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே பலரும் ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கூறி வருகின்றனர்.

ஏனெனில் 23 வயதான சுப்மன் கில் தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதோடு ஐபிஎல் தொடரிலும் நல்ல ரன் குவிப்பை வழங்கிய அவர் நிச்சயம் இந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரராக இருப்பார் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான கிரேக் சேப்பல் இங்கிலாந்து சூழ்நிலைகளில் சுப்மன் கில் தடுமாறுவார் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : நான் இந்த போட்டி குறித்து பெரிதாக பேச மாட்டேன். ஆனால் ஆஸ்திரேலியா வீரர்கள் இரண்டு விஷயங்களை சரியாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் சுப்மன் கில்லை விரைவில் வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிறேன். இங்கிலாந்து மைதானத்தில் நல்ல பவுன்ஸ் மற்றும் ஸ்விங் கிடைக்கும் பட்சத்தில் அவரை எளிதில் வீழ்த்தலாம்.

- Advertisement-

சுப்மன் கில் ஒரு நல்ல பிளேயர் தான் இருந்தாலும் அவருக்கு எதிராக சரியான லென்த் மற்றும் லைனில் இங்கிலாந்து சூழ்நிலையை சாதகமாக்கி பந்து வீசினால் விரைவில் அவரது விக்கெட்டை வீழ்த்த முடியும். அப்படி இல்லையெனில் நிச்சயம் அவர் ஆஸ்திரேலிய அணியை தண்டித்து விடுவார். அதேபோன்று ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்களும் தங்களது முதல் இன்னிங்சில் பெரிய ரன் குவிப்பை வழங்க வேண்டும். அப்போதுதான் இந்திய அணியின் பவுலர்களுக்கு அழுத்தம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: வீடியோ: பாக்கிஸ்தான் வீரருக்கு முன்பு ரோகித் சர்மாவை மோசமாக கேலி செய்த டீவி தொகுப்பாளர். கை கொட்டி சிரித்த பார்வையாளர்கள். கடுப்பாகும் இந்திய ரசிகர்கள்

ஏற்கனவே சுப்மன் கில் இங்கிலாந்து மண்ணில் தடுமாற்றத்தை கண்டுள்ளார். எனவே நிச்சயம் இம்முறை ஆஸ்திரேலிய அணி சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் இங்கிலாந்து சூழ்நிலைகளில் அவர் தடுமாறுவார் என்று நினைக்கிறேன். இந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கூடுதல் வேகப்பந்து வீச்சாளருடன் செல்ல வேண்டும். ஏனெனில் இந்த மைதானம் நிச்சயம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும். எனவே துவக்கத்திலேயே ஆஸ்திரேலிய பவுலர்கள் சுப்மன் கில்லுக்கு எதிராக அழுத்தத்தை ஏற்படுத்தினால் அவரது விக்கெட்டை விரைவில் வீழ்த்தலாம் என்று கிரேக் சேப்பல் கூறியுள்ளார்.

சற்று முன்