இந்திய அணியானது அடுத்ததாக ஜூன் முதல் வாரத்தில் இங்கிலாந்து சென்றடைந்து அங்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறயிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது. இந்த இறுதிப்போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அணியின் இடம்பிடித்திருந்த சில வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியதால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களும் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் கூடுதல் ஸ்டான்ட் பை வீரராக தேர்வுசெய்யப்பட்டிருந்த துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இந்த இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.
இந்த ஆண்டு தற்போது நடைபெற்று வரும் நடப்பு 16 ஆவது தொடரில் சென்னை அணியின் துவக்க வீரராக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஐ.பி.எல் தொடருக்கு பின்னர் அவருக்கு ஜூன் 3-4 ஆகிய தேதிகளில் திருமணம் நடைபெறவுள்ளது.
இந்த திருமணம் முடிந்து ஜுன் 5 ஆம் தேதி லண்டன் பயணிப்பார் என்று எதிர்பார்த்த வேளையில் தற்போது அவர் இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளார். அதன் காரணமாக அவருக்கு பதிலாக இந்த ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மாற்று துவக்க வீரராக இந்திய அணியில் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார்.
இந்த ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக துவக்க வீரராக 14 போட்டிகளில் விளையாடிய அவர் 48 ரன்கள் சராசரியுடன் 625 ரன்களை குவித்து அசத்தியிருந்தார். இதில் 1 சதம் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும். இவரது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம் காரணமாக இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று பலரும் பேசிவந்த வேளையில் அவருக்கு இந்திய அணியில் இணையும் அதிர்ஷ்ட்டம் அடித்துள்ளது.
இதையும் படிக்கலாமே: கேஎல் ராகுல் குறித்து வெளியான சர்ச்சை புகைப்படம். கோவத்தோடு அவருடைய மனைவி போட்ட அதிரடி பதிவு. கப் சிப் ஆன நெட்டிசன்கள்
ருதுராஜ் கெய்க்வாட் திருமணம் காரணமாக தான் இந்த போட்டியில் இருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இதற்க்கு பொருத்தமானவர் தான் என்பது கிரிக்கெட் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.