உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயம் மேற்கொண்டு அங்கு அந்த அணிக்கு எதிரான போட்டிகளில் விளையாட உள்ளது. 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரானது ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை, கிட்டத்தட்ட இரு மாத காலம் நடக்க உள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில், இந்திய அணி விளையாட உள்ள டெஸ்ட் போட்டியானது WTC சுழற்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் என்பதால், இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அப்படியான மாற்றம் எதுவும் இருக்கப்போவதில்லை என்று சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரோஹித் சர்மா பெரிய அளவில் பார்மில் இல்லை, அதே போல புஜாராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆகையால் ரோகித் சர்மா ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும், புஜாராவிற்கு இந்த தொடரில் முழுமையாக வாய்ப்பிருக்காது என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், அப்படியான மாற்றம் எதுவும் இருக்கப்போவதில்லை என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ரோகித் குறித்த முடிவு பேசுபொருளாக இல்லாவிட்டாலும், புஜாரா குறித்த முடிவு பலருக்கும் ஆச்சர்யத்தை கிளப்பி உள்ளது என்றே கூறலாம். கடந்த 2022 ஆம் ஆண்டு அவருக்கு இந்திய அணியில் பெரிதாக இடம் இருக்கவில்லை. ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதுவே அவரது இறுதி பொடியாக இருக்கும் என்றும் ஒரு பேச்சு இருந்தது.
ஆனால் அவர் தொடர்ந்து அணியில் தனது இடத்தை தக்கவைத்துள்ளார். அதே சமயம் அவரது ஆட்டம் அந்த அளவிற்கு தற்போது சிறப்பாக உள்ளதா என்றால், நிச்சயம் இல்லை என்று தான் கூற வேண்டும். உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை பொறுத்தவரையில் அவர் 14 மற்றும் 27 என்ற சொற்ப எண்ணிக்கையில் தனது விக்கெட்டை இழந்தார்.
இப்படி புஜாரா அணியில் தொடர்வதால், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் ஆகியோருக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்கான இடம் கிடைக்காது. அவர்கள் இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த இரு வீர்களுமே சில டெஸ்ட் போட்டிகளில் இந்திய A அணிக்காக விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: அவங்களோட சொந்த மண்ணுல இந்திய அணிய ஜெய்ச்சி, சம்பவம் பண்ணிட்டு வாங்க. அது தான் நமக்கு கெத்து. அப்ரிடியின் அனல் பறக்கும் பேச்சு
எது எப்படி இருந்தாலும் பிசிசிஐ இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும். அப்போது யார் எல்லாம் இந்திய அணியில் இருக்கப்போகிறார்கள் என்பது தெளிவாக தெரிந்துவிடும். அதுவரை காத்திற்குப்போம்.