- Advertisement -
Homeவிளையாட்டுஎன்னோட அம்மாவையோ, அக்காவையோ பத்தி தப்பாக பேசினாலாம் என்னால் பொறுத்துப்போக முடியாது. ஜெய்ஸ்வால் ஆவேசம்

என்னோட அம்மாவையோ, அக்காவையோ பத்தி தப்பாக பேசினாலாம் என்னால் பொறுத்துப்போக முடியாது. ஜெய்ஸ்வால் ஆவேசம்

- Advertisement-

இளம் விளையாட்டு வீரர்களின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மாறி உள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். மிக எளிமையான ஒரு குடும்ப பின்னணியில் இருந்து வந்து இன்று இந்திய அணியில் இடம்பெறும் அளவிற்கு தகுதியை வளர்த்துக்கொண்டுள்ள அவர் பலருக்கும் முன்னுதாரணமாக உள்ளார். இந்த மாதம் நடக்க விருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் இவரின் பெயர் இந்திய அணியில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை, அவர் 14 போட்டிகள் விளையாடி, 625 ரன்கள் அடித்துள்ளார். அவருடைய ஐபிஎல் சராசரி 48.07 ஆக உள்ளது. அதே சமயம் அவரது ஸ்ட்ரைக் ரேட் 163.61 ஆக உள்ளது. அதே சமயம் உள்நாட்டுப் போட்டிகளிலும் அவரின் ஆட்டம் அபாரமாகவே இருந்துள்ளது. அவர் உள்நாட்டு போட்டிகளில் 1845 ரன்கள் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், துலீப் டிராபியில் நடந்த ஒரு விரும்ப தகாத சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். 2022 துலீப் டிராபியில் வெஸ்ட் சோன் அணியில் இருந்த ஜெய்ஸ்வால் தொடர்ச்சியாக சவுத் சோன் வீரரான ரவி தேஜாவை திட்டுவதாக(ஸ்லெட்ஜ் செய்வதாக) கூறியதை தொடர்ந்து வெஸ்ட் சோனின் கேப்டனான அஜிங்க்யா ரஹானே, ஜெய்ஸ்வாலை டிரஸ்ஸிங் ரூமிற்க்கு அனுப்ப முடிவு செய்தார்.

சமீபத்திய ஒரு பேட்டியில் அது குறித்து ஜெய்ஸ்வாலிடம் கேள்வி எழுப்புகையில் அவர் கூறியதாவது, நடந்து முடிந்த விடயங்களை பற்றி பேசுவதில் என்ன பயன். ஒரு போட்டியில் ஆக்ரோஷம் என்பது மிக முக்கியம், நான் மனதளவில் ஆக்ரோஷமாக தான் இருப்பேன். ஆனால் சில நேரங்களில் அந்த ஆக்ரோசமானது வெளிப்பட்டு விடும்.

- Advertisement-

ஆனாலும் அந்த சம்பவம் நடக்கையில் நான் பெரிதாக எதுவும் பேசவில்லை. ஆனாலும் பரவாயில்லை, எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அப்படி இருக்கையில் அதை பற்றி இப்போது பேசி என்ன பயன். அதனால் அது குறித்து நான் இப்போது எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறினார் ஜெய்ஸ்வால். ஒருவேளை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக நடக்கும் ஹை ப்ரொபைல் போட்டிகளில் நீங்கள் அவமானப்படுத்தப்பட்டால்(ஸ்லெட்ஜ் செய்யப்பட்டால்) என்ன செய்வீர்கள் என்று நெறியாளர் கேட்க,

ஒருவேளை அப்படி நடந்தால் அதை நான் என்னால் முடித்தவரை எனக்குள்ளேயே வைத்திருக்க முயற்சிப்பேன். ஒரு பஞ்சு போல நான் அதை உரிந்துகொண்டு, தேவைப்பட்டால் அதை வெளிப்படுத்தவும் செய்வேன் என்றார் ஜெய்ஸ்வால். அதே போல மேலும் அவர் ஸ்லெட்ஜிங் குறித்து கூறுகையில்,

இது போன்றவை எல்லோருக்கும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. சில வீரர்கள் ஸ்லெட்ஜ் செய்ப்படவில்லையா என்றால் நிச்சயம் அது யாருக்கும் தெரியாது. அதே போல எதிரில் இருப்பவர் கூறும் வார்த்தையை பொறுத்து தான் ஒருவர் அதை பொறுத்துக்கொள்ளவேண்டுமா இல்லையா என்பது இருக்கிறது. என் அம்மாவை பற்றியோ அல்லது என் சகோதரியைப் பற்றியோ யாராவது தப்பாக சொன்னால், நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்றார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

சற்று முன்