- Advertisement 3-
Homeவிளையாட்டுநீங்க எல்லா ஏசி ரூம்ல சொகுசா உக்காந்து இருக்கீங்க... ஆனா நாங்க... மொகமது ஷமி அளித்த...

நீங்க எல்லா ஏசி ரூம்ல சொகுசா உக்காந்து இருக்கீங்க… ஆனா நாங்க… மொகமது ஷமி அளித்த நக்கல் பதில்… சிரித்த ஹர்ஷா போக்லே

- Advertisement 1-

உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்றுள்ளது. இந்த 3 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. வழக்கமாக மொஹாலி மைதானத்தில் கொஞ்சம் வெப்பம் அதிகமாக இருக்கும். இதனையறிந்தும் இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதல் ஓவரை வீசிய முகமது ஷமி மிட்செஷ் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்தினார். சிறப்பாக பந்துவீசிய ஷமி, பவர் பிளே ஓவர்காளில் வழக்கமாக 5 ஓவர்களை வீசக் கூடியவர். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் முகமது ஷமி பவர் பிளே ஓவர்களில் 4 ஓவர்கள் மட்டுமே வீசினார். அதுமட்டுமல்லாமல் ஓய்வறை நோக்கி திரும்பினார்.

இதனால் முகமது ஷமிக்கு ஏதும் காயம் ஏற்பட்டதா என்ற ரசிகர்கள் அச்சமடைந்தனர். ஆனால் மீண்டும் களமிறங்கிய முகமது ஷமி, 10 ஓவர்களையும் வீசி 51 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் முகமது ஷமி எதற்காக திடீரென ஓய்வறை நோக்கி சென்றார் என்று ரசிகர்களுக்கு புரியாமலேயே இருந்தது.

- Advertisement 2-

இந்த நிலையில் மொஹாலி மைதானத்தில் இருந்த அதிக வெப்பம் காரணமாக ஷமி ஓய்வறை சென்று திரும்பியதாக கூறப்பட்டது. இதன்பின் ஆஸ்திரேலிய பேட்டிங்கை முடிவடைந்த பின் முகமது ஷமியை பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே பேட்டி கொடுத்தார். அப்போது சின்ன ஸ்பெல்லை வீசிய பின் உடனடியாக ஓய்வறை திரும்பினீர்கள். அதற்கு வெப்பம் தான் காரணமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த முகமது ஷமி, ஆம், நீங்கள் அனைவரும் ஏசி அறையில் சொகுசாக இருக்கிறீர்கள். நாங்கள் தான் வெப்பத்தில் களமிறங்கி விளையாடுகிறோம் என்று நக்கலாக பதிலளித்தார். முகமது ஷமி இந்த வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

சற்று முன்