- Advertisement -
Homeகிரிக்கெட்நீ இங்க ஹீரோ ஆக வேணாம்.. சர்பராஸ் கானை போட்டிக்கு நடுவே எச்சரித்த கேப்டன் ரோஹித்..

நீ இங்க ஹீரோ ஆக வேணாம்.. சர்பராஸ் கானை போட்டிக்கு நடுவே எச்சரித்த கேப்டன் ரோஹித்..

-Advertisement-

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையே நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்து போட்டியை வெல்லும் முனைப்புடன் இருப்பதாகவே தெரிகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி அதிக பலத்துடன் 46 ரன்கள் முன்னிலையுடன் தான் இருந்தது. இந்திய அணியின் பேட்டிங்கில், இளம் வீரர் துருவ் ஜூரேல், 90 ரன்கள் எடுத்து இந்திய அணியை காப்பாற்ற, அவர்களும் நல்ல ஸ்கோரை எட்டி இருந்தனர். தொடர்ந்து, முன்னிலை வகித்த இங்கிலாந்து அணி தங்களின் பேட்டிங்கை 2 வது இன்னிங்சில் தொடங்கி இருந்தது.

இந்த முறையும் அவர்கள் அதிக ரன்கள் குவித்து சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயிப்பார்கள் என்று தான் அனைவரும் கருதினர். ஆனால் இந்த டெஸ்ட் தொடரில், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றாமல் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த முறை இங்கிலாந்தின் முதல் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்றி அசத்தினார்.

இதன் பின்னர், குல்தீப் யாதவும் அவருடன் கைகோர்த்து சிறப்பாக பந்து வீச, இங்கிலாந்து அணியின் ஒட்டுமொத்த வரிசையையும் அவர்கள் இருவரும் சேர்ந்து காலி செய்தனர். அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் எடுக்க, 145 ரன்னில் ஆல் அவுட்டானது இங்கிலாந்து அணி.

இதனால், இந்திய அணியின் இலக்கும் நினைத்ததை விட குறைந்து போக, நான்காவது நாள் இறுதியில் 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பேட்டிங்கை தொடங்கியது. கேப்டன் ரோஹித் ஷர்மா, அதிரடியான தொடக்கத்தை கொடுக்க, 8 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகளை இழக்காமல் 40 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது. அனைத்து விக்கெட்டுகளுமே கைவசம் இருக்க, இன்னும் 152 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இதில் அவர்கள் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றுவார்கள் என்றே தெரிகிறது.

-Advertisement-

ஆனால், அதே வேளையில் எதையாவது ஒரு மேஜிக்கை செய்து போட்டியை தங்கள் பக்கம் திருப்பி வெற்றி பெறும் முனைப்பையும் காண்பித்து தொடரை தக்க வைக்கும் முயற்சியிலும் கூட இங்கிலாந்து அணி இறங்கலாம் என தெரிகிறது. இதனால் இரு அணிகளுக்கும் 4 வது நாள் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய அணி ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போது இளம் வீரர் சர்பராஸ் கானிடம் ஜாலியாக ரோஹித் ஷர்மா சொன்ன விஷயம் அதிக கவனம் பெற்று வருகிறது. பேட்ஸ்மேன் அருகே மிக கிளோசில் நின்ற சர்ப்ராஸ் கான், ஹெல்மெட் அணியாமல் நின்றுள்ளார். இதனை முதல் ஸ்லிப்பில் நின்று கவனித்த ரோஹித், “இங்கே ஹீரோ ஆக வேண்டாம்” எனக்கூறி ஹெல்மெட் அணிய வலியுறுத்தினார். இறுதியில் அவர் ஹெல்மெட் அணிந்து கொண்டு ஃபீல்டிங் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-Advertisement-

சற்று முன்