- Advertisement -
Homeவிளையாட்டு13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கதறியழுத சிஎஸ்கே ரசிகை. அப்படியே சில நிமிடங்களில் மாறிய அவருடைய...

13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கதறியழுத சிஎஸ்கே ரசிகை. அப்படியே சில நிமிடங்களில் மாறிய அவருடைய ரீயாக்சன் அற்புதம்

- Advertisement-

நேற்று முன் தினம் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய பைனல், ஒரு இறுதிப் போட்டிக்கே உரிய சுவாரஸ்யத்தோடும் பரபரப்போடும் நடந்து முடிந்தது. கடைசி ஓவரின் இரண்டு பந்துகளில் கிட்டத்தட்ட பலருக்கு நெஞ்சுவலியே வரும் அளவுக்கு பதற்றத்தை ஏற்படுத்திவிட்டனர் என்று சொன்னால் மிகையாகாது.

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை இழந்தது. அடுத்து சென்னை அணி பேட் செய்த போது முதல் ஓவரிலேயே மழை குறுக்கிட்டு போட்டி பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் போட்டி பாதிக்கப்பட்ட நிலையில் திரும்ப 12 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஓவர்கள் 15 ஆக குறைக்கப்பட்டு வெற்றி இலக்கு 171 என நிர்ணயிக்கப்பட்டது.

கிட்டட்தட்ட 12 ரன்ரேட் தேவை என்ற நிலையில் ஆடிய சிஎஸ்கே அணியில் தொடக்க ஜோடிகள் சிறப்பான தொடக்கத்த்தை அமைத்துக் கொடுத்தனர். பவர் ப்ளே முடிந்ததும் இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆக, ஆட்டத்தில் இரண்டு அணிகளும் வெற்றி பெறும் என்ற சமமான வாய்ப்புகளே கடைசி வரை இருந்தன.

சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுவதும் புது பேட்ஸ்மேன்கள் வந்து ரன்களை குவிப்பதாகவும் ஆட்டம் சீராக சென்றது. இதில் அம்பாத்தி ராயுடு, ரஹானே ஆகியோர் கணிசமாக ரன்களை துரிதமாக சேர்த்து அவுட் ஆகி வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்க கேப்டன் தோனி முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் சென்னை அணி ரசிகர்களுக்கு இடையே பதற்றமும் பரபரப்பும் அதிகமானது. அதன் பின்னர் வந்த ஜடேஜா நம்ப முடியாத இன்னிங்ஸை ஆடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார்.

- Advertisement-

ஒரு கட்டத்தில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவை என்று இருந்த போது சென்னை அணிக் கண்டிப்பாக தோற்றுவிடும் என்று நம்பப்பட்டது. அப்போது மைதானத்தில் இருந்த ஒரு இளம்பெண் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார். ஆனால் அடுத்தடுத்த பந்துகளில் ஜடேஜா சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசி வெற்றி வாகை சூடியபோது அவர் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இது சம்மந்தமான வீடியோ ட்விட்டரில் கடந்த இரண்டு நாட்களாக வைரலாகி வருகிறது. இதுபோன்ற பல உணர்ச்சி பூர்வமான தருணங்களின் குவியலாக நேற்று முன் தினம் நடந்த இறுதிப் போட்டி அமைந்தது.

சற்று முன்