- Advertisement -
Homeவிளையாட்டுதோனி சுத்தமா மாறிட்டாரு. கோலி தான் எனக்காக இதெல்லாம் பண்ணாரு - யுவராஜ் சிங் பேச்சு

தோனி சுத்தமா மாறிட்டாரு. கோலி தான் எனக்காக இதெல்லாம் பண்ணாரு – யுவராஜ் சிங் பேச்சு

- Advertisement-

இந்திய அணி 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பை என இரண்டு உலகக் கோப்பை போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு வீரர் யுவராஜ் சிங் என்றால் அது மிகையாகாது. 2007 டி20 உலக கோப்பையில், வென்றே ஆக வேண்டும் என்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த அறை சதமும் செமி பைனலில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவரின் அபார ஆட்டமும் நம்மால் மறக்கவே முடியாது.

அதே போல 2011 உலக கோப்பையில் பிளேயர் ஆப் தி டோர்னமெண்ட் என்ற விருதும் அவரின் சிறப்பான ஆட்டத்திற்காக அவருக்கு கிடைத்தது. 2011 உலகக் கோப்பை பிறகு ஒரு கட்டத்தில் அவருக்கு கேன்சர் உள்ளது என்று தெரிந்த பிறகு அவர் கிரிக்கெட்டில் இருந்து சற்று விலகி இருந்தார். பிறகு 2012 இல் அவர் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்தார்.

அப்படி வந்த பிறகு அவருடைய ஆட்டம் முன்பு போல் இல்லாமல் இருந்தது. அதன் காரணமாக அணியில் அவர் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டி இருந்தது. யுவராஜ் சிங் தனது கடைசி ஒரு நாள் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டு விளையாடினார் .அதே வருடத்தில் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக தனது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் அதிகபட்ச ஸ்கோர் ஆன 150-ஐ அடித்தது குறிப்பிடத்தக்கது.

டி20 போட்டிகளில் யுவராஜ் சிங்கருக்கு சில வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது எனினும் அவரது ஆட்டம் அதில் சொல்லும் அளவிற்கு இல்லை. இந்த நிலையில் யுவராஜ் சிறிது பிரேக் எடுத்த பிறகு அவர் மீண்டும் அணியில் இடம்பெற்றது பற்றி கூறுகையில் கோலி மட்டும் இல்லையென்றால் என்னால் அணியில் மீண்டும் இடம் பிடித்திருக்க முடியாது. அவர் என்னை ஆதரித்தார்.

- Advertisement-

அதேசமயம் என்னை 2019 உலகக் கோப்பை அணியில் தேர்ந்தெடுக்க தேவுக்குழு விரும்பவில்லை என்பதை தோனி தான் எனக்கு தெளிவாக புரியவைத்தார். தோனியை பொறுத்தவரை 2011 உலகக் கோப்பை வரை அவர் என் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தார். நீ தான் என்னுடைய மெயின் பிளேயர் என்று அவர் என்னிடம் கூறுவார்.

ஆனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மீண்டும் நான் அணிக்கு திரும்பியதும் என்னுடைய ஆட்டம் மாறியது அணியிலும் பல விஷயங்கள் மாறின. அதனால் 2015 உலகக் கோப்பையை பொருத்தவரை எதையும் என்னால் குறிப்பிட்டு கூற முடியவில்லை என்று அவர் கூறியுளளார்.

சற்று முன்