அடடா ஜெய்ஸ்வால் மேட்டர்ல இத மறந்துட்டமே. நேற்றைய போட்டியில் சைலண்ட்டா சாதிச்ச சஹால்!

- Advertisement -

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 8 விக்கெட்களை இழந்து 149 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கடைசி நேரத்தில் கொல்கத்தா அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து, ரன்ரேட் வீழ்ச்சியையும் சந்தித்தது. இதற்கு முக்கியக் காரணம் ராஜஸ்தான் சுழல்பந்து வீச்சாளர் யஷ்வேந்திரா சஹால் தான். 4 ஓவர்கள் வீசிய அவர் 25 ரன்களை மட்டுமே கொடுத்த அவர் 4 விக்கெட்களையும் வீழ்த்தினார். அதுவும் 18 ஆவது ஓவரை வீசிய அவர் இரண்டு விக்கெட்களை ஒரே ஓவரில் வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ராஜஸ்தான் ராயல்ஸ் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு முக்கியமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் டுவைன் பிராவோவை நேற்றைய போட்டியில் முந்தினார்.

- Advertisement -

சாஹல் மற்றும் பிராவோ இருவரும் 183 விக்கெட்டுகளில் சமநிலையில் இருந்தனர், ஆனால் நிதிஷ் ராணாவின் விக்கெட்டை எடுத்த சஹால் முதலிடத்துக்கு முன்னேறினார்.  இப்போது ஐபிஎல் விளையாடும் வீரர்களின் பட்டியலில் பியூஷ் சாவ்லா 174 விக்கெட்டுகளுடன் 3வது இடத்திலும், அமித் மிஸ்ரா 172 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

ஆனால் நேற்றைய போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அபாரமான 13 பந்துகளில் அடிக்கப்பட்ட அரைசத இன்னிங்ஸ், சஹாலின் இந்த சாதனையை மறைத்துவிட்டது. நேற்றைய போட்டியில் ஜெய்ஸ்வாலின் இன்னிங்ஸ் அவருக்கான இந்திய அணி கதவை திறக்கக் கூடும். அதுபோலவே சஹாலும் கடந்த சில ஆண்டுகளாக அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் சஹாலுக்கும் இந்த ஐபிஎல் தொடர் மீண்டும் இந்திய அணிக் கதவுகளைத் திறக்கலாம். தற்போது 21 விக்கெட் வீழ்த்தியுள்ள சஹால் பர்ப்பிள் கேப்பையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்