இந்திய அணியில் இடம் இல்லனா என்ன.. இங்கிலாந்து செல்லும் முக்கிய வீரர்.. ஒப்பந்ததுல கையெழுத்தும் போட்டாச்சு

- Advertisement -

உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்துவீச்சு பிரிவில் குல்தீப் யாதவ், ஜடேஜா, அக்சர் படேல் என இடதுகை சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே உள்ளனர். நட்சத்திர வலதுகை சுழற்பந்துவீச்சாளர்களான அஸ்வின், சஹால் இடம்பெறவில்லை.

சமீபகாலமாக சஹால் விஷயத்தில் பிசிசிஐ சற்று மோசமாகவே நடந்துள்ளது. 2021ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது அவர் நல்ல ஃபார்மில் இருந்தும் அவருக்கு பதிலாக வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அவரை அணியில் எடுக்காமல் பெஞ்சுலேயே உக்காரவைக்கப்பட்டார். தற்போது சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் அவரை பிசிசிஐ ஓரம்கட்டியுள்ளது.

தற்போது இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால் சஹால் இங்கிலாந்து கவுண்டி முதல் தர சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டில் கென்ட் அணிக்கு விளையாட முடிவு செய்துள்ளார். இதன் மூலம் நடப்பு சீசனில் கென்ட் அணிக்கு விளையாடும் இரண்டாவது இந்திய வீரர் ஆனார் சஹால். முன்னதாக இடதுகை பந்துவீச்சாளர் ஹர்ஷ்தீப் சிங் கென்ட் அணிக்கு விளையாடினார்.

- Advertisement -

தற்போது கவுண்டி முதல் தர கிரிக்கெட் தொடரில் கென்ட் அணி விளையாடும் அடுத்த மூன்று போட்டிகளில் சஹால் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார். இது குறித்து கென்ட் கிரிக்கெட் தளத்தில் சஹால் கூறுகையில், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவது எனக்கு ஒரு உற்சாகமான சவாலாக உள்ளது, இந்த தொடருக்காக நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

இந்த சீசனின் கடைசி மூன்று சாம்பியன்ஷிப் போட்டிகளில் சஹாலை போன்ற ஒரு தரமான சுழற்பந்து வீச்சாளரைப் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இங்கிலாந்து கன்டிஷனில் விளையாட அவர் ஆர்வமாக உள்ளார். அவரது சர்வதேச அனுபவம் எங்கள் அணிக்கு கை கொடுக்கும் என கென்ட் அணியின் இயக்குனர் பால் டவுன்டன் தெரிவித்தார்.

ஹரியானா அணிக்காக இதுவரை 33 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள சஹால் 87 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் 2019 உலக்கோப்பைக்கு பின் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர்கள் பட்டியலில் சஹால் நான்காவது இடத்தில் உள்ளார். 23 ஒருநாள் போட்டிகளில் 37 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். நடப்பு ஆண்டில் அவர் இதுவரை இரண்டே ஒருநாள் போட்டிகளில் மட்டுமே சஹால் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்