இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2023-ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அக்டோபர் 5-ஆம் தேதி நாளை அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்க இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட இருக்கின்றன. இந்திய மண்ணில் நடைபெற இருக்கும் இந்த உலக கோப்பை தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று 48 போட்டிகளில் விளையாட இருக்கின்றன.
இந்நிலையில் இந்த தொடரின் இறுதிவரை சென்று கோப்பையை கைப்பற்றப்போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த அணி வெற்றி பெறும்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக இந்த உலகக் கோப்பை தொடரில் கோப்பையை கைப்பற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகளுக்கு வாய்ப்பு அதிகம் என்று பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாஹீர் ஜான் இந்த உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பான அணியாக செயல்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசி அவர் கூறுகையில் : இந்த உலகக் கோப்பை தொடரில் அனைவருமே இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற அணிகளை பற்றியே அதிகம் பேசி வருகின்றனர். ஆனால் என்னை பொறுத்தவரை நிச்சயம் தென் ஆப்பிரிக்க அணி கணிக்க முடியாத ஒரு அணியாக செயல்பட வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியின் உலகக்கோப்பை ரெக்கார்ட் என்பது ஐசிசி தொடரில் பெரிய அளவில் சிறப்பாக இருந்தது கிடையாது. ஏனெனில் எப்பொழுதுமே இது போன்ற முக்கிய தொடர்களில் அந்த அணி இதுவரை தோல்வியையே சந்தித்து வருகிறது. இவ்வேளையில் தற்போது தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளதாக ஜாஹீர் கான் குறிப்பிட்டுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அண்மையில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மூன்றுக்கு இரண்டு (3-2) என்ற கணக்கில் கைப்பற்றிய அவர்கள் தற்போது பேட்டிங் மற்றும் பவுலிங் சரியான பலத்தில் இருப்பதால் அவர்களை ஆபத்தான அணி என்று ஜாஹீர் கான் குறிப்பிட்டுள்ளார். அதோடு தென்னாபிரிக்க அணியில் இருக்கும் பல வீரர்கள் இந்திய மைதானங்களில் ஐபிஎல் போட்டிகளில் நிறையவே விளையாடிய அனுபவம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.