அஜித்தை வச்சி படம் எடுக்கப்போறாரு, ஆனால் நிம்மதி இல்லாமல் இருக்குறாரு? மகிழ் திருமேனி குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

- Advertisement -

முதலில் “ஏகே 62” புராஜெக்ட் விக்னேஷ் சிவனின் கைகளுக்குத்தான் சென்றது. அதன் பின் சில காரணங்களால் விக்னேஷ் சிவன் அந்த புராஜெக்ட்டில் இருந்து வெளியேறிவிட்டார். அதனை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி அந்த புராஜெக்ட்டை கைப்பற்றியுள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்கும் என தகவல் வெளிவந்தது. ஆனால் தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. அதற்கான காரணத்தையும் ஒரு சிலர் கூறுகிறார்கள்.

- Advertisement -

அதாவது சமீபத்தில் லைகா நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஆதலால்தான் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை என தகவல் வெளிவந்தது. எனினும் லைகா நிறுவனம் ஸ்கிரிப்ட்டை முழுவதுமாக விரைவில் முடிக்கும்படி மகிழ் திருமேனிக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே வந்தனராம். ஆதலால் மகிழ் திருமேனி விரைவில் ஸ்கிரிப்ட்டை முடித்து அதனை அஜித்திடம் கொடுத்தும்விட்டாராம்.

ஆனால் அஜித்குமார் நடுவில் பைக் டூர் கிளம்பியதால் அந்த ஸ்கிரிப்ட்டை அவர் படிக்கவே இல்லையாம். மீண்டும் சென்னைக்கு திரும்பிய அஜித், இன்னும் ஸ்கிரிப்ட் பேப்பரை தொட்டுப்பார்க்கவே இல்லை என கூறப்படுகிறது. இந்த புராஜெக்டில் மகிழ் திருமேனி ஒப்பந்தமாகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் படப்பிடிப்பை தொடங்காமல் இருப்பதால் மகிழ் திருமேனி சோகத்தில் இருக்கிறாராம். மேலும் அஜித் குமார் இன்னும் ஸ்கிரிப்ட்டை படித்து முடிக்காத நிலையில் அவர் ஸ்கிரிப்ட்டை படித்துவிட்டு என்ன சொல்ல காத்திருக்கிறாரோ என்ற நிம்மதியும் இல்லாமல் இருக்கிறாராம். இவ்வாறு ஒரு தகவல் மகிழ் திருமேனி குறித்து வெளிவருகிறது. எனினும் இது குறித்த உண்மைத்தன்மை தெரியவரவில்லை.

- Advertisement -

“விடாமுயற்சி” திரைப்படத்தை “தளபதி 68” திரைப்படத்துடன் வெளியிட வேண்டும் என அஜித் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. “வாரிசு” vs “துணிவு” போல் மீண்டும் ஒரே நாளில் விஜய்-அஜித் மோதவுள்ளதாக சில செய்திகள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்