மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் போன்ற பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “மாமன்னன்”. இத்திரைப்படம் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகார வர்க்கத்தால் படும் துன்பத்தை தனது திரைப்படங்களின் மூலம் கண்முன்னே கொண்டு வருபவர் மாரி செல்வராஜ். அவர் இதற்கு முன் இயக்கிய “பரியேறும் பெருமாள்”, “கர்ணன்” ஆகிய திரைப்படங்கள் மாஸ் ஹிட் திரைப்படங்களாக அமைந்தன. ஒரு பக்கம் இத்திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் சிலர் இத்திரைப்படங்களை கடுமையாக விமர்சித்தும் வந்தனர்.
மாரி செல்வராஜ் தற்போது தமிழ் சினிமாவின் தனித்துவ இயக்குனராக திகழ்ந்து வருகிறார். இவரது திரைப்படங்களுக்கென்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. பல உதவி இயக்குனர்களின் இன்ஸ்பிரேஷனாக மாரி செல்வராஜ் திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது “மாமன்னன்” திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வருகிற ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் பலரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதனை தொடர்ந்து நேற்றைய முன் தினம் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 19 ஆம் தேதி வெளிவரும் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் பாடலான “ராசா கண்ணு” பாடல் வெளிவந்துள்ளது. இந்த பாடலை வடிவேலுவே பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வடிவேலுவின் மனதை உருகவைக்கும் குரல் கேட்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. தற்போது இந்த பாடலை பலரும் பார்த்துவிட்டு புகழ்ந்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மனதுக்கு நெருக்கமாக இருப்பதாக பலரும் கூறிவருகின்றனர். அப்பாடல் இதோ…