கேப்டன் மில்லர் குறித்து வெளிவந்த அட்டகாசமான அப்டேட் – பிரஸ்ட் லுக், டீஸர் எப்போது வெளியாகும் – முழு விவரம் இதோ.

- Advertisement -

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “கேப்டன் மில்லர்”. இதில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி பகுதியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட ஒரு காட்சிக்காக நீர்நிலைகளின் மேல் ஒரு அணைக்கட்டு செட் போடப்பட்டு அதனை வெடிக்கவைத்திருக்கிறார்கள்

இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க, மாவட்ட கலெக்டர் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு தற்காலிக தடை விதித்தார். எனினும் அதன் பின் உரிய அனுமதி பெற்று மீண்டும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால் நீர்நிலைகள் இருக்கும் இடத்தில் படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுக்கவே கூடாது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

இத்திரைப்படத்தின் இயக்குனரான அருண் மாதேஸ்வரன் இதற்கு முன் “ராக்கி”, “சாணி காயிதம்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இவ்விரு திரைப்படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை இயக்கி வருகிறார் அருண் மாதேஸ்வரன். “கேப்டன் மில்லர்” திரைப்படம் பிரிட்டிஷ் ஆட்சி காலகட்டத்தில் கதை நகர்வது போன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்திற்காக 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல செட்டுக்களை போட்டு படமாக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முந்தினம் “கேப்டன் மில்லர்” திரைப்படத்திற்கான முக்கியமான அப்டேட் வெளிவரும் என படக்குழுவினர் கூறினார்கள். அதன்படி தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் மாதம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல் இத்திரைப்படத்தின் டீசர் ஜூலை மாதம் வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் தனுஷ் கையில் துப்பாக்கியுடன் தென்பட, கீழே பலரும் விழுந்து கிடக்கிறார்கள். இதன் மூலம் இத்திரைப்படம் ஒரு பவர் பாக்ட் ஆக்சன் திரைப்படமாக உருவாகி வருவதாக தெரியவருகிறது.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்