எனது கணவரால் என் உயிருக்கு ஆபத்து- பருத்திவீரன் சரவணனின் மனைவி முதல்வரிடம் புகார்! திடுக்கிடும் தகவல்…

- Advertisement -

“பருத்திவீரன்” திரைப்படத்தில் செவ்வாழை சித்தப்பு என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்டவர் சரவணன். இவர் “பருத்திவீரன்” திரைப்படத்தின் மூலம் பெரிதாக பேசப்பட்டாலும், அதற்கு முன் அவர் 1990களில் “பொண்டாட்டி ராஜ்ஜியம்”, “சூரியன் சந்திரன்” ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார்.

அதன் பின் பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகியிருந்த சரவணன், “பருத்திவீரன்” திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த சரவணன், தற்போது ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு சரவணன் சென்னை மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடம் இருந்து இரண்டு வீடுகளை சொந்தமாக வாங்கியிருந்தார். வீடுகளுக்கு சொந்தமான கார் பார்க்கிங்கிற்கும் வீட்டினர் உபயோகிக்கும் இடத்திற்கும் இடையே இருக்கும் 800 சதுர அடி இடத்தை, அந்த பகுதியை சேர்ந்த இராமமூர்த்தி என்பவர் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து அந்த இடத்தில் கடை அமைத்திருக்கிறார். இது குறித்து சரவணன், போலீஸில் புகார் அளித்தது மட்டுமல்லாமல் ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனிடம் கோரிக்கையையும் வைத்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இராமமூர்த்தியின் கடையை காலி செய்து மீண்டும் சரவணனிடம் அந்த இடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சரவணின் முன்னாள் மனைவியான சூர்யா ஸ்ரீ, தனது முன்னாள் கணவர் தன்னை அடியாட்களுடன் வந்து ஆபாசமாக மிரட்டுகிறார் என முதலைமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

- Advertisement -

அந்த புகாரில், “என்னை சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட சரவணன், நான் சம்பாதித்த பணம் மற்றும் நகைகளை வைத்து மவுலிவாக்கத்தில் வீடுகளை வாங்கினார். நடுவில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் எனது சம்பாத்தியத்தில் வாழ்ந்தார். அதன் பின் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் தற்போது ஸ்ரீதேவி என்ற பெண்ணுடன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

மேலும் அந்த வீட்டிற்கு நான்தான் ஈ.எம்.ஐ கட்டி வருகிறேன். சமீபத்தில் என்னை 30 அடியாட்களுடன் வீட்டிற்கு வந்து அசிங்கமாக பேசி  வீட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டினார். எனக்கு எந்த பிரச்சனை வந்தாலும் அதற்கு சரவணன்தான் காரணம். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு எனது நியாயத்தை பெற்றுத்தர வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி சினிமாத்துறையினரின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

- Advertisement -

சற்று முன்